LOADING...
ஈரானில் நடப்பது என்ன? திடீரென வான்வெளியை மூடிய அரசாங்கம்; அமெரிக்க தாக்குதல் அபாயம்?
ஈரான் வான்வெளி திடீர் மூடல்

ஈரானில் நடப்பது என்ன? திடீரென வான்வெளியை மூடிய அரசாங்கம்; அமெரிக்க தாக்குதல் அபாயம்?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 15, 2026
08:27 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் நாடு வியாழக்கிழமை (ஜனவரி 15) அதிகாலை தனது வான்வெளியை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் திடீரென மூடியுள்ளது. இதற்கான முறையான காரணத்தை ஈரான் அரசு தெரிவிக்காத நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதி வழியாகச் செல்ல வேண்டிய பல சர்வதேச விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ஈரானில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தப்போராட்டங்களை ஒடுக்க ஈரான் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. வான்வெளி மூடப்பட்டது, உள்நாட்டுப் போராட்டக்காரர்கள் மீதான ஒரு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைக்கு முன்னறிவிப்போ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல் அச்சம்

மற்றொரு புறம், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அல்லது ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், ஈரானின் இந்தத் திடீர் நடவடிக்கை அமெரிக்காவின் சாத்தியமான ராணுவத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவும் பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், தற்போது ஈரான் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டாலும், எப்போது வேண்டுமானாலும் அங்கு போர் மேகங்கள் சூழலாம் என்ற நிலையே நீடிக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தச் சூழலை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

Advertisement