LOADING...
அதிர்ச்சியில் ரசிகர்கள்! நடிகர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் ஜேசன் சஞ்சய் உண்மையிலேயே அன்ஃபாலோ செய்தாரா? உண்மை இதுதான்
தந்தையை இன்ஸ்டாகிராமில் ஜேசன் சஞ்சய் அன்ஃபாலோ செய்தது தொடர்பாக வெளியான தகவலின் உண்மை

அதிர்ச்சியில் ரசிகர்கள்! நடிகர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் ஜேசன் சஞ்சய் உண்மையிலேயே அன்ஃபாலோ செய்தாரா? உண்மை இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 02, 2026
11:19 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள செய்தி கோலிவுட் மற்றும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய்யை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக சில செய்திகள் பரவின. இதனால் விஜய் மற்றும் அவரது மகனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழத் தொடங்கின.

பின்னணி

அன்ஃபாலோ சர்ச்சை: உண்மை என்ன?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட்களின்படி, ஜேசன் சஞ்சய் நடிகர் விஜய் சேதுபதி உட்பட 35 பேரைப் பின் தொடர்கிறார், ஆனால் அதில் விஜய்யின் பெயர் இல்லை என்று காட்டப்பட்டது. இருப்பினும், இதற்கு ஒரு முக்கிய விளக்கத்தை சிலர் முன்வைக்கின்றனர். அதாவது ஜேசன் சஞ்சய் இதற்கு முன்னரே தனது தந்தையையோ அல்லது அவரது அரசியல் கட்சியையோ இன்ஸ்டாகிராமில் பின் தொடரவில்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எனவே, விவாகரத்து செய்திகளுக்கும் இந்த 'அன்ஃபாலோ' விவகாரத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றும், இது திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தி என்றும் கருதப்படுகிறது.

குற்றச்சாட்டுகள்

சங்கீதாவின் விவாகரத்து மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள்

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிக்கத் தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவில் விஜய் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மன உளைச்சல், புறக்கணிப்பு மற்றும் வேறொரு நடிகையுடனான தொடர்பு ஆகியவற்றைத் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தன்னிடம் இருந்து உணர்வுப்பூர்வமாக விலகி இருப்பதாகவும் சங்கீதா அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

தற்போதைய நிலைப்பாடு

ஜேசன் சஞ்சயின் தற்போதைய நிலைப்பாடு

இந்தக் குடும்பப் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஜேசன் சஞ்சய் தனது முதல் திரைப்படமான சிக்மா படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சந்தீப் கிஷன் நடிக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது தந்தையின் அரசியல் பயணம் மற்றும் தாயின் விவாகரத்து வழக்கு எனப் பல நெருக்கடிகள் இருந்தாலும், ஜேசன் சஞ்சய் தனது சினிமா கனவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த விவகாரம் குறித்து விஜய் தரப்பிலிருந்தோ அல்லது ஜேசன் சஞ்சய் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Advertisement