கேரளா: செய்தி
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் நிரபராதி என விடுதலை
கேரளாவில் 2017 ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், மலையாள நடிகர் திலீப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவரை எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
8.5 ஆண்டுகளுக்கு பிறகு: மலையாள நடிகர் திலீப் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விசாரணைக்கு பிறகு, இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
செவ்வாயில் தமிழக, கேரள பெயர்கள்: பெரியார், தும்பா, வர்கலா இனி செவ்வாய் கிரக பள்ளங்கள்
கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கேரளா: 16 வயது மகனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது UAPA வழக்கு பதிவு
கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான UAPA (Unlawful Activities Prevention Act)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொச்சி: 1.35 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உடைந்ததால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கேரள நீர் ஆணையத்திற்குச் சொந்தமான ஒரு பெரிய குடிநீர் தொட்டி திங்கள்கிழமை அதிகாலை வெடித்து அருகிலுள்ள வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 'கடுமையான வறுமையற்ற மாநிலம்' என கேரளாவை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்
மாநில உருவாக்க தினமான சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கடுமையான வறுமையற்ற மாநிலம் (Extreme Poverty-Free) என்று அறிவித்து, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
வீடியோ: கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்
கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது.
சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைகளுக்காக அக்டோபர் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
"வருமானம் பத்தலைங்க!": மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்குப் பதிலாக நியமிக்க பரிந்துரைத்தார்.
சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பாக துல்கர் சல்மான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் தனது உயர் ரக கார்களில் ஒன்றை பறிமுதல் செய்ய சுங்கத் துறை எடுத்த முடிவை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சோதனை; சட்டவிரோத சொகுசு கார் இறக்குமதிக்காக விசாரணை
சொகுசு கார் வரி ஏய்ப்பைத் தடுக்கும் ஒரு பெரிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மற்றும் சுங்கத்துறை ஆகியவை "நும்கூர்" என்ற நாடு தழுவிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.
பழனி மற்றும் சபரிமலையில் பரஸ்பரம் நிலங்களை பரிமாறப்போகும் தமிழக, கேரளா அரசுகள்; ஏன்?
சபரிமலை மற்றும் பழனி ஆகிய இரு முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்
மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படும் நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற அரிய வகை நோய்த்தொற்று, கேரளாவில் அதிகரித்து வருகிறது.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று 67 பேருக்கு உறுதி; இதுவரை 18 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் அரிய மற்றும் பெரும்பாலும் ஆபத்தான மூளை தொற்று 67 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தந்தையை பணியமர்த்திய 16 வயது இந்திய ஏஐ விஞ்ஞானி ராகுல்
கேரளாவைச் சேர்ந்த 16 வயதான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) விஞ்ஞானி ராகுல் ஜான் அஜு, தனது கண்டுபிடிப்புகளால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மூளை உண்ணும் அமீபிக் நோயால் அதிகரிக்கும் பாதிப்பு; கேரளாவில் ஆறாவது நபர் உயிரிழப்பு
அரிதான மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் மூளை தொற்றுநோயான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Amoebic Meningoencephalitis) நோயால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார்.
வட இந்திய காற்று மாசுபாட்டால் தென்னிந்தியாவிற்கும் பாதிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
வட இந்திய மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கடுமையான காற்று மாசுபாடு, இப்போது தென்னிந்திய மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மலையாள நடிகையின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து கேரள காங்கிரஸ் MLA ராஜினாமா
மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, கேரள காங்கிரஸ் MLA ராகுல் மம்கூத்ததில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கேரளாவில் மட்டும் ஒருமாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது ஏன்? இதுதான் காரணம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் ஒரு தனித்துவமான கலாச்சார வேறுபாடு குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் AMMAவில் மீண்டும் இணையனும்; மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வான ஸ்வேதா மேனன் அதிரடி
நடிகை ஸ்வேதா மேனன் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இனி ஜூன்-ஜூலை மாதங்களில் பள்ளி ஆண்டு விடுமுறை? மாற்றி யோசிக்கும் கேரள அரசு
பள்ளி விடுமுறைகளை ஏப்ரல்-மே மாதங்களில் பாரம்பரிய கோடை விடுமுறையிலிருந்து ஜூன்-ஜூலை பருவமழை மாதங்களுக்கு மாற்ற கேரள அரசு முன்மொழிந்துள்ளது.
இளம் பெண் மருத்துவர் புகார்; கேரள ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் என்ற மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி மீது, ஒரு இளம் மருத்துவர் அளித்த புகாரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து: கிராண்ட் முப்தி அலுவலகம் தகவல்
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து தப்பியோடிய பாலியல் வன்கொடுமை-கொலை குற்றவாளியை 10 மணி நேரத்தில் பிடித்த காவல்துறை
கேரளாவின் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளியான கோவிந்தசாமி தப்பிச் சென்றார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த UK-வின் போர் விமானத்திற்கு பார்க்கிங் சார்ஜ் எவ்வளவு?
ஐந்து வாரங்களுக்கும் மேலாக கேரளாவில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B லைட்னிங் II ஸ்டெல்த் போர் விமானம், இறுதியாக நாட்டை விட்டு புறப்பட்டது.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? அரசின் முயற்சிக்கு நன்றி கூறிய சுவிசேஷகர்
ஏமன் மற்றும் இந்தியத் தலைவர்களின் தீவிர இராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக லைவ் மின்ட் செய்தி தெரிவித்துள்ளது.
கேரள முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்
கேரள முன்னாள் முதல்வரும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் திங்கட்கிழமை காலமானார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரதட்சணை கொடுமையால் இறந்து போன மற்றொரு கேரள பெண்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2026 கேரளத் தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக சசி தரூரை களமிறக்க திட்டமா?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) மிகவும் பிரபலமான முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் எம்பி சசி தரூர் உருவெடுப்பதன் மூலம் கேரளாவில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பெங்களூரு சிட்-ஃபண்ட் மோசடி: 400+ முதலீட்டாளர்களை ஏமாற்றி ₹40 கோடியை அபேஸ் செய்த கில்லாடி தம்பதி
கேரளாவை சேர்ந்த தம்பதியினர், பெங்களூருவில் 400க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை மிகப்பெரிய சிட் ஃபண்ட் மோசடி மூலம் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க கேரளா விரையும் 5 தனிப்படை போலீசார்
போதைப்பொருள் வழக்கில் தற்போது கைதாகி சிறையில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் கைதிற்கு காரணமான தயாரிப்பாளர் அளித்த தகவலின் பேரிலும், அடுத்ததாக வளையத்தில் சிக்கியிருப்பவர் நடிகர் கிருஷ்ணா.
50 ஆண்டுகளுக்கு முன்பு, 4ஆம் வகுப்பில் உண்டான சண்டை- க்ளாஸ்மேட்டின் பற்களை உடைத்த 2 முதியவர்கள்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட ஒரு தகரருக்கு தற்போது பழி தீர்த்துள்ளனர் கேரளாவை சேர்ந்த 2 முதியவர்கள்.
தெற்கு தமிழக மாநிலங்களில் நாளை முதல் கனமழை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 10) முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அரபிக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; கேரளாவிற்கு ஹாஸ்மேட் லாரியை அனுப்பியது தேசிய பேரிடர் மீட்புப் படை
கேரளாவை ஒட்டி அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலான MSC ELSA3இன் கண்டெய்னர்கள் மூழ்கத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 30 பேர் கொண்ட குழுவையும், தமிழ்நாட்டின் அரக்கோணத்திலிருந்து கேரளாவின் கொல்லத்திற்கு ஒரு சிறப்பு ஹாஸ்மேட் (அபாயகரமான பொருட்கள்) லாரியையும் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் பதிவான 1,009 COVID-19 வழக்குகள்; கேரளா, டெல்லி மற்றும் மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் வழக்குகள்
திங்கட்கிழமை காலை நிலவரப்படி, இந்தியாவில் 1,009 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது!
கேரளாவில் பருவமழை துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப்
கேரளாவின் திருவனந்தபுரத்தை தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ரோபேஸ் (Prophaze), சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில் 85 மில்லியன் தீங்கிழைக்கும் சைபர் அச்சுறுத்தல்களை நடுநிலையாக்கியதாகக் கூறியுள்ளது.
சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் முதல் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்ய வருகை தரும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக மே 19 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரலாறு படைக்க உள்ளார்.