காற்றழுத்த தாழ்வு நிலை: செய்தி
கனமழை எச்சரிக்கை! வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் மற்றும் காற்றழுத்த மாற்றங்கள் காரணமாக, இந்திய வானிலை மண்டலத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 30) சேலம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உபி-யில் பெருமழை: 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்ததைத் தொடர்ந்து, மத்திய மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் கடந்த 48 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக வானிலை அப்டேட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழியும்?
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மதுரை, திருச்சி, ஈரோடு, நாகை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி சதமடித்துள்ள நிலையில், இன்று முதல் அக்டோபர் 1 வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: கரையை கடந்த புயல் சின்னம்
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் தீவிரமடைகிறது; சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்
தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் தொடக்கத்தில் பருவமழை வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகும் மாற்றம்; பிப்ரவரி 20 முதல் கொட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் அதே பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (ஜனவரி 7) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: ஜனவரி 9, 10 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் தருவாயிலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'Ditwah' வலுவிழப்பு: தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்யும்!
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'Ditwah' புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பு; காற்றழுத்த தாழ்வு எப்போது கரையை கடக்கும்?
'டிட்வா' புயலின் எச்சம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
நவம்பர் 29ஆம் தேதி வட மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்': காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்க வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது: தமிழகத்திற்கு பாதிப்பு உள்ளதா?
மலாக்கா ஜலசந்தி அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்திருப்பதாகவும், அதேசமயம் குமரிக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு: தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: 7 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், இன்று (நவம்பர் 17) ஏழு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன.
வங்கக் கடலில் 'Montha' புயல் உருவானது: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மோந்தா' (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?
வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை (அக்டோபர் 16) நாடு முழுவதும் இருந்து விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, அக்டோபர் 3 கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: IMD அறிவிப்பு
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் கனமழையால் 5 பேர் பலி, பள்ளிகள், மெட்ரோ ரயில் சேவைகள் பாதிப்பு
கொல்கத்தா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய கனமழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணிப்பு
வடக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய சாத்தியம்: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு
வங்கக்கடலின் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது - இந்திய வானிலை மையம் அறிவிப்பு
தெற்கு குஜராத் மற்றும் மேற்குவங்கம் அருகே ஒரே நேரத்தில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு: தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்
வங்கக்கடல் பகுதியில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD
கர்நாடக கடற்கரையிலிருந்து கிழக்கு-மத்திய அரபிக்கடலில் புதன்கிழமை ஒரு சூறாவளி சுழற்சி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது.
வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: தமிழ்நாடு வேதர்மேன் கணிப்பு
இரு தினங்களுக்கு முன்னர் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை மழை
முன்னரே தெரிவித்திருந்தது போல, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழை எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்
தெற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழப்பதில் தாமதம் அடைந்துள்ளது.