
வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: தமிழ்நாடு வேதர்மேன் கணிப்பு
செய்தி முன்னோட்டம்
இரு தினங்களுக்கு முன்னர் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
அதன் காரணமாக கோவை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை பொழியும் என அறிவிக்கப்பட்டது.
எனினும், ஏனைய மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
வெப்பம்
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்
இந்த நிலையில் தனியார் வானிலையாளரான தமிழ்நாடு வேதர்மன், "வட தமிழ்நாட்டில் ஏப்ரல் 11,12 ஆகிய தேதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும்; ராயலசீமா, உள் கர்நாடக பகுதிகளில் இருந்து வெப்ப அலை தமிழ்நாடு நோக்கி வர வாய்ப்பு" என X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனால், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரு நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும் எனவும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குறைந்தபட்சம் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளார்.
embed
Twitter Post
Hot Weather Alert for North Tamil Nadu --------------------------------- Dry Hot winds from NW from Rayalseema/ Interior Karnataka would be pushed into North TN reach Vellore, Ranipet, Kanceepuram, West Interior Chennai and Tiruvallur districts. Temp to spike next 4-5 days.... pic.twitter.com/NaM2lt2WUZ— Tamil Nadu Weatherman (@praddy06) April 10, 2025