வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவித்துள்ளது. இது குறித்து தனியார் வானிலையார் தமிழ்நாடு வெதர்மன் (Tamilnadu Weatherman) வெளியிட்டுள்ள பதிவில், "நவம்பர் 12-17 வரை மழையின் தீவிர நிலை, இதில் KTCC (சென்னை) நவம்பர் 12-16 வரை இடைவேளையுடன் தினசரி மழையைப் பெறும்" எனக்கூறியுள்ளார். அதோடு, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இன்று இரவு / நாளை காலை முதல் 5-வது பருவமழை தொடங்கும். நாளை, நவம்பர் 12ஆம் தேதி KTCC (சென்னை மற்றும் அண்டை மாவட்டங்கள்) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Twitter Post
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை
முன்னதாக, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது அதே இடத்தில் நிலவுவதாக கூறப்பட்டது. அதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது வரவிருக்கும் 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மற்ற சில மாவட்டங்களில் நவம்பர் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.