LOADING...

கனமழை: செய்தி

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான Ditwah புயல் வலுவிழந்தாலும், அதன் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை KTCC மாவட்டங்களை கடந்த 2 நாட்களாக திணறடித்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பு; காற்றழுத்த தாழ்வு எப்போது கரையை கடக்கும்?

'டிட்வா' புயலின் எச்சம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

02 Dec 2025
சென்னை

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

'டிட்வா' புயலின் தாக்கத்தால், சென்னையில் கடந்த முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

01 Dec 2025
விடுமுறை

சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட்: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் வலுவிழந்த போதிலும், அதன் தாக்கம் காரணமாகச் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வேகம் குறைந்தது; டித்வா புயலின் தற்போதைய நிலை என்ன? வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 Nov 2025
தமிழகம்

டிட்வா புயல் கோரத் தாண்டவம்: டெல்டாவில் 1.35 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பெய்த தொடர் மழையால் சுமார் 1.35 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

29 Nov 2025
சென்னை

டித்வா புயல் எச்சரிக்கை: சென்னையில் 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் டித்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாகவே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெருங்கும் டித்வா புயல்: 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

29 Nov 2025
இலங்கை

இலங்கையில் டித்வா புயலின் கோரத் தாண்டவம்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு

டித்வா புயலால் தூண்டப்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையில் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் சனிக்கிழமை (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.

Cyclone Ditwah நவ. 30 அதிகாலை கரையை கடக்கும்! 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அதி தீவிர புயலான 'தித்வா' (Ditwah), வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் கரையை கிடைக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

28 Nov 2025
இலங்கை

இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்; பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை நெருங்கும் 'தித்வா' புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இன்று உருவாகிறது சென்யார் புயல்: தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; சென்னைக்கு பாதிப்பா?

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; 48 மணிநேரத்தில் புயல் உருவாகலாம் என எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா எச்சரித்துள்ளார்.

வங்கக்கடலில் புயல் சின்னம்: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 Nov 2025
மீனவர்கள்

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிவித்துள்ளது.

மிக கனமழைக்கு வாய்ப்பு; மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அவசர எச்சரிக்கை

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழக அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக் கிழமை (நவம்பர் 15) தெரிவித்துள்ளது.

14 Nov 2025
மழை

காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11, 2025) மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு (நவம்பர் 11 முதல் 13 வரை) தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

07 Nov 2025
மழை

தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழையால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம்: ரிசர்வ் நாளுக்கு மாறுமா ஆட்டம்?

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறவிருந்த மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியானது, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பெய்யத் தொடங்கிய கனமழை காரணமாகத் தாமதப்பட்டுள்ளது.

இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.

வங்கக் கடலில் 'Montha' புயல் உருவானது: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மோந்தா' (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

24 Oct 2025
மழை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?

வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

22 Oct 2025
மழை

அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது.

கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?

தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

21 Oct 2025
தமிழகம்

அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

20 Oct 2025
சென்னை

சென்னையில் கனமழை; மேலும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால், திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், தீபாவளி காலைப் பொழுதைக் காண நேர்ந்தது.

சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்; கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

18 Oct 2025
பருவமழை

இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு; தீபாவளி அன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்குப் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

16 Oct 2025
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்து, உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

07 Oct 2025
மழை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு (அக்டோபர் 12 வரை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

06 Oct 2025
மழை

வங்காளத்தில் பெய்து வரும் தொடர் மழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு; 28 பேர் உயிரிழந்தனர்

வடக்கு வங்காளத்தின் மலைகள் மற்றும் சமவெளிகளில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் அக்டோபர் 11 வரை மழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நிலச்சரிவு, வெள்ளத்தால் டார்ஜிலிங்கில் 17 பேர் பலி; சிக்கிம் சாலை துண்டிப்பு

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவுமிக்க நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் காரணமாக, குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

05 Oct 2025
நேபாளம்

கனமழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 51 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கிழக்கு நேபாளம் முழுவதும் பெய்து வரும் தீவிர பருவமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரபிக்கடல் புயலால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) வெளியிட்ட அறிக்கையில், வடமேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த சக்தி தீவிர புயலின் தாக்கம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு (அக்டோபர் 9 வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, அக்டோபர் 3 கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை: மகாராஷ்டிரா மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

26 Sep 2025
கோவை

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25 Sep 2025
மழை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்று 5 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 Sep 2025
கொல்கத்தா

கொல்கத்தாவில் கனமழையால் 5 பேர் பலி, பள்ளிகள், மெட்ரோ ரயில் சேவைகள் பாதிப்பு 

கொல்கத்தா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய கனமழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: IMD

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 19) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டேராடூனில் மேக வெடிப்பு; இருவர் மாயம், ஐடி பூங்கா நீரில் மூழ்கியது

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், தாம்சா நதி நிரம்பி வழிந்து வரலாற்று சிறப்புமிக்க தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலை மூழ்கடித்தது.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

15 Sep 2025
மழை

மும்பையில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது

மும்பையில் திங்கள்கிழமை அதிகாலை புயல் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

15 Sep 2025
மழை

நாளை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் நாளை வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.