தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (ஜனவரி 7) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என IMD கணித்துள்ளது. "வங்காள விரிகுடாவில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்துள்ளது; அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது" என அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Update based on 07.01.2026/0830 hrs IST:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) January 7, 2026
Well Marked Low Pressure Area over Bay of Bengal concentrated in a Depression; likely to intensify further into a Deep Depression in the next 24 hrs.
கனமழை
தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, ஜனவரி 9 அன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கும், காரைக்கால் பகுதிக்கும் கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
With the Well-Marked Low in South Bay likely to become a Depression in the next few hours Coastal TN is likely to see rains return from later tomorrow night. Widespread heavy rains likely over the coastal stretch between Chennai and Delta with possibly very heavy rains between… pic.twitter.com/2mTj7uEmBB
— Chennai Rains (COMK) (@ChennaiRains) January 7, 2026