LOADING...
சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2025
08:26 am

செய்தி முன்னோட்டம்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வங்கக் கடல் தாழ்வு பகுதி, எதிர்பார்த்தபடி வலுவடையாததால், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்' அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனினும், வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அரபிக் கடல்

அரபிக் கடலில் மற்றுமொரு தாழ்வு மண்டலம்

இதே நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதேபோல், வங்கக் கடலில் நிலவும் வானிலை காரணமாக தமிழகம் மற்றும் இலங்கையில் இன்று மழை பெய்யும் என தினமலர் வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வாய்ப்பு. நாளை (24 ஆம் தேதி), கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அக்டோபர் 26 முதல் கனமழை பெய்யும் மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.