LOADING...
காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!
காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் கனமழை வாய்ப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 14, 2025
09:08 am

செய்தி முன்னோட்டம்

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நாளை மறுநாள், நவம்பர் 16ஆம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதற்கு அடுத்த நாள் நவம்பர் 17 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் கனமழை பெய்யும் என IMD கூறியது.

சென்னை மழை

சென்னையில் திங்கள் முதல் மழை பெய்யக்கூடும்

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில்," தெற்கு தமிழகத்தின் தெற்கு விரிகுடா பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சியின் தாக்கத்தால் இன்றும் மழை பெய்யக்கூடும். டெல்டா கடற்கரையில் சனிக்கிழமை இரவு / ஞாயிற்றுக்கிழமை காலை முதல் #NEM2025 தொடங்கும் என்றும், சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் படிப்படியாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வறண்டதாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post