LOADING...
தங்க நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி; குறைந்தது விலை!
தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 12) குறைந்துள்ளது

தங்க நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி; குறைந்தது விலை!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 12, 2026
11:00 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 12) குறைந்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹110 குறைந்து ₹14,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹880 குறைந்து ₹1,16,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 குறைந்து ₹15,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 குறைந்து ₹1,26,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை அதிகரித்துள்ளது

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹90 குறைந்து ₹11,880 ஆகவும், ஒரு சவரன் ₹720 குறைந்து ₹95,040 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹295.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement