ரஷ்யாவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் முடக்கம்; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்-ஐ முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதேபோல், மற்றொரு முன்னணி செயலியான டெலிகிராம் சேவையிலும் அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'ரோஸ்கோம்நாட்சோர்' (Roskomnadzor) கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரஷ்ய சட்டங்களுக்கு புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான தகவல்களை பகிர மறுப்பது ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுச் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் 'என்கிரிப்ட்' (Encrypted) செய்யப்பட்ட அழைப்புகளை கட்டுப்படுத்த ரஷ்யாவின் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு செயலி
உள்நாட்டு செயலியான 'மேக்ஸ்' (MAX) பயன்படுத்த அழுத்தம்
வெளிநாட்டு செயலிகளை முடக்குவதன் மூலம், ரஷ்ய அரசு தனது சொந்த தயாரிப்பான 'MAX' என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயல்கிறது. சீனாவின் 'வீசாட்' (WeChat) பாணியில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி மூலம் அரசாங்க சேவைகளையும் பெற முடியும். ஆனால், இந்தச் செயலி மூலம் மக்களின் அந்தரங்க தகவல்கள் கண்காணிக்கப்படும் என விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர். தற்போது இந்த செயலி National Directoryலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், VPN வசதி இல்லாமல் இதை பயன்படுத்துவது கடினம். ஆப்பிள் நிறுவனத்தின் 'FaceTime' செயலி ஏற்கனவே டிசம்பர் மாதம் முதல் ரஷ்யாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Today the Russian government attempted to fully block WhatsApp in an effort to drive people to a state-owned surveillance app. Trying to isolate over 100 million users from private and secure communication is a backwards step and can only lead to less safety for people in Russia.…
— WhatsApp (@WhatsApp) February 12, 2026