ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 9) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹100 குறைந்து ₹14,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 குறைந்து ₹1,19,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹109 குறைந்து ₹16,309 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹872 குறைந்து ₹130,472 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹70 குறைந்து ₹13,000 ஆகவும், ஒரு சவரன் ₹560 குறைந்து ₹1,04,000 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹290.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.