வானிலை அறிக்கை: செய்தி
வங்கக்கடலில் புயல் சின்னம்: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: 7 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், இன்று (நவம்பர் 17) ஏழு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிக கனமழைக்கு வாய்ப்பு; மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அவசர எச்சரிக்கை
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழக அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக் கிழமை (நவம்பர் 15) தெரிவித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை இன்றும் (நவம்பர் 13, 2025) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11, 2025) மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு
வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு (நவம்பர் 11 முதல் 13 வரை) தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 10 மற்றும் 11) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 3) முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம்: ரிசர்வ் நாளுக்கு மாறுமா ஆட்டம்?
நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறவிருந்த மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியானது, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பெய்யத் தொடங்கிய கனமழை காரணமாகத் தாமதப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன.
'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?
வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான 'மோந்தா' (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 29, 2025) அதிகாலை அறிவித்துள்ளது.
வானிலை அறிக்கை: இந்த வாரம் முழுக்க தமிழகம் மற்றும் புதுவைக்கு மிதமழை உண்டு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நவம்பர் 3 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Montha புயல்: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்
வங்காள விரிகுடாவில் மோந்தா புயல் தீவிரமடைந்து வருகிறது.
இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.
வங்கக் கடலில் 'Montha' புயல் உருவானது: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மோந்தா' (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
வலுவடையும் மொந்தா புயல்; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல்: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?
வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது.
கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?
தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கனமழை; மேலும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால், திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், தீபாவளி காலைப் பொழுதைக் காண நேர்ந்தது.
சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்; கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு; தீபாவளி அன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்குப் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்
சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை (அக்டோபர் 16) நாடு முழுவதும் இருந்து விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் மாறிய வானிலை; அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் (அக்டோபர் 16 அல்லது 17) வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.