Page Loader

உலகம்: செய்தி

உலகிலேயே ஆடம்பரச் செலவுகளுக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு 

உலகின் ஆடம்பரச் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கு வாய்ப்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தகவல்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்களுக்காக குரல் கொடுத்த பொருளாதார நிபுணர் அபுல் பர்கத் கைது

புகழ்பெற்ற பங்களாதேஷ் பொருளாதார நிபுணரும், ஜனதா வங்கியின் முன்னாள் தலைவருமான அபுல் பர்கத், தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக சிவில் சமூகத்தின் மீதான ஒரு ஆபத்தான அடக்குமுறையாக டாக்கா பெருநகர காவல்துறையின் துப்பறியும் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையில் 1,300க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்; டிரம்ப் நிர்வாகம் அதிரடி முடிவு

அமெரிக்க வெளியுறவுத் துறையை மறுவடிவமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை 1,300க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பணி நீக்க அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.

10 Jul 2025
கனடா

பாலிவுட் நடிகர் கபில் சர்மா கனடா கஃபே வளாகத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் கனடாவில் புதிதாகத் திறக்கப்பட்ட கஃபே வளாகத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய work-life பேலன்ஸ் குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது; நியூசிலாந்து தொடர்ந்து முதலிடம்

உலகளாவிய வாழ்க்கை-வேலை சமநிலை (Work-Life Balance) குறியீட்டில் இந்தியா 60 நாடுகளில் 42வது இடத்தில் உள்ளது.

10 Jul 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் புலம்பெயர் பில்லியனர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா; முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் யார்?

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின் அமெரிக்காவின் பணக்கார குடியேறிகள் 2025 பட்டியலின்படி, அமெரிக்காவில் பில்லியனர் குடியேறிகளில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றெந்த நாடுகளையும் விட அதிகரித்துள்ளது.

மீண்டும் தனியார் நிறுவனத்தின் வேலைக்குச் சேர்ந்தார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கோல்ட்மேன் சாக்ஸில் மீண்டும் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார்.

07 Jul 2025
பிரிக்ஸ்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நிரந்தர இடம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தீர்மானம்

17வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்பிடத்தக்க கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்த வாரம் இந்தியாவின் மீது ISS பறக்க போகிறது; அதை எப்படி பார்க்கலாம்?

உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக விளங்கும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நமது கிரகத்தைச் சுற்றி வருகிறது.

07 Jul 2025
பிரிக்ஸ்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர் நாடாக இணைந்தது இந்தோனேசியா; 10 நாடுகள் பார்ட்னர்கள் அந்தஸ்துடன் இணைப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் இந்தோனேசியாவை புதிய உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர்.

இனி முதலீடே இல்லாமல் வாழ்நாள் முழுக்க வசிக்க அனுமதிக்கும் கோல்டன் விசா திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகம்

குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு புதிய நியமன அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவுக்கு நாடு கடத்தி விடலாம் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கருத்து

நல்லெண்ண நடவடிக்கையாக ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற மோசமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை பாகிஸ்தான் எதிர்க்காது என்று அறிவித்த பின்னர், முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி ஒரு புதிய அரசியல் புயலைத் தூண்டியுள்ளார்.

அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவிப்பு

எதிர்பாராத அரசியல் திருப்பமாக, பில்லியனர் தொழில்முனைவோர் எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மே மாதத்திற்குப் பிறகு பொதுவெளியில் தென்படாத ஜி ஜின்பிங்; ஆட்சிக் கவிழ்ப்பு அச்சத்தால் பதுங்கிவிட்டாரா?

கடந்த மே மாத இறுதியில் இருந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பது, சீனாவை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவும் உள் அதிகாரப் போராட்டம் குறித்த தீவிர ஊகங்களைத் தூண்டியுள்ளது.

மசூத் அசார் எங்க இருக்கார்னே பாகிஸ்தானுக்கு தெரியவில்லையாம்; சொல்கிறார் பிலாவல் பூட்டோ

ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இருக்கும் இடம் பாகிஸ்தானிற்குத் தெரியாது என்றும், இந்தியா நம்பகமான உளவுத்துறை தகவலை வழங்கினால் அவரைக் கைது செய்வதில் மகிழ்ச்சியடைவேன் என்றும் பாகிஸ்தான் அரசியல்வாதி பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பெரிய அளவிலான வரி குறைப்புக்கள் மற்றும் செலவு குறைப்புக்கள் தொகுப்பில் டிரம்ப் கையெழுத்து

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜூலை நான்காம் தேதியை ஒரு பெரிய வெற்றியுடன் கொண்டாடியுள்ளார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமரை பீகாரின் மகள் என குறிப்பிட்ட பிரதமர் மோடி; பின்னணி என்ன?

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 4) டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு சென்றார்.

04 Jul 2025
அமெரிக்கா

அமெரிக்கா ஜூலை 4 அன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது ஏன்? வரலாற்றுப் பின்னணி

அமெரிக்க சுதந்திர தினம் என்று பரவலாக அறியப்படும் ஜூலை நான்காம் தேதி, ஜூலை 4, 1776 அன்று சுதந்திரப் பிரகடனத்தை முறையாக ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்கிறது.

03 Jul 2025
அமெரிக்கா

உலகின் மிகப்பெரிய காற்று மாசுபடுத்தி அமெரிக்க ராணுவம்தான்; ஆய்வில் வெளியான புதிய தகவல்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் உலகின் மிகப்பெரும் நிறுவனம் அமெரிக்க ராணுவம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

03 Jul 2025
ஜப்பான்

விற்பனை இலக்கை எட்டாத ஊழியர்களை நிர்வாணமாக்கி டார்ச்சர் செய்த ஜப்பான் நிறுவனம்? முன்னாள் ஊழியர்கள் வழக்கு

ஒசாகாவை தலைமையிடமாகக் கொண்ட ஜப்பானிய நிறுவனமான நியோ கார்ப்பரேஷன், குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு இழிவான தண்டனைகள் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து கடுமையான பொது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரப் பெண்மணி, $102 பில்லியன் சொத்துக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா

வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டனின் ஒரே மகள் ஆலிஸ் வால்டன், ஃபோர்ப்ஸால் உலகின் பணக்காரப் பெண்மணியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

30 Jun 2025
சீனா

சார்க்குக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சீனா முயற்சி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பதட்டங்கள் காரணமாக 2016 முதல் செயலற்ற நிலையில் இருக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பான சார்க் அமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய பிராந்திய குழுவை உருவாக்கும் திட்டங்களை பாகிஸ்தானும் சீனாவும் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக ஒவ்வாமை விழிப்புணர்வு வாரம் 2025: ஒவ்வாமை தொடர்பான கட்டுக்கதைகள் இவ்ளோ இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

உலக ஒவ்வாமை விழிப்புணர்வு வாரம் 2025 ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.

கடற்படை தலைமைத் தளபதி மற்றும் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை நீக்கினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டின் மக்கள் விடுதலை ராணுவம் மீதான கட்டுப்பாட்டை இறுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ராணுவத்தின் உயர் பதவியில் உள்ள முக்கிய நபர் உள்ளிட்ட பலரை நீக்கியுள்ளார்.

புதிய டிஜிட்டல் சேவை வரி விதிப்பால் கடுப்பு; கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதாக டிரம்ப் அறிவிப்பு

புதிய டிஜிட்டல் சேவை வரியை விதிக்கும் கனடாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

27 Jun 2025
அமெரிக்கா

டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு தடை விதிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு குறிப்பிடத்தக்க சட்ட வெற்றியாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) ஒரு பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது.

நீதிமன்ற விசாரணையில் பெண் நீதிபதியை ஹனி எனக் கூறிய வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஒரு நீதிமன்ற அறையில், நேரடி ஒளிபரப்பு அமர்வின் போது, ​​உதவி அட்டர்னி ஜெனரல் வில்லியம் கோசெலிஸ்கி தற்செயலாக ஒரு நீதிபதியை "ஹனி (Honey)" என்று அழைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிப்பு

இஸ்ரேல் ராணுவம், ஆறு ஈரானிய ராணுவ விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியான இலக்குவைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு, 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்ததாக அறிவித்துள்ளது.

23 Jun 2025
ஈரான்

அமெரிக்காவை அடிப்பது உறுதி; நேரம், இடத்தை ராணுவம் உறுதி செய்யும் என ஐநா கூட்டத்தில் ஈரான் அறிவிப்பு

ஐநா சபையின் அவசர பாதுகாப்பு கவுன்சில் அமர்வில், ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையை விடுத்து, தனது அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

22 Jun 2025
ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல்; எண்ணெய் விலைகள் உயரும் அபாயம்; இந்தியாவுக்கு பாதிப்பா?

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

22 Jun 2025
ஈரான்

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுடன் இணைந்து, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

அற்புதமான வெற்றி; ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

22 Jun 2025
ஈரான்

தனக்கு பிறகு யார்? போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் 3 வாரிசுகளை அறிவித்தார் ஈரான் தலைவர் அலி கமேனி

இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் மொஜ்தபா கமேனியை பரிசீலனையில் இருந்து விலக்கி, தனக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கான வாரிசுரிமைத் திட்டங்களைத் தொடங்கும் அரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரான் முழுவதும் துல்லியத் தாக்குதல்களில் மூன்று உயர்மட்ட தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்

ஈரானுடனான மோதலில், இஸ்ரேல் சமீபத்திய உயர் துல்லிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) மூன்று உயர் தளபதிகளைக் கொன்றது.

2028 ஆம் ஆண்டுக்குள் உலகம் 1.5°C புவி வெப்பமடைதல் வரம்பைத் தாண்டும்

2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மனிதர்கள் அதிக அளவு பசுமை இல்ல வாயுவை வெளியிடுவார்கள், இதனால் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றதாகிவிடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

20 Jun 2025
ஈரான்

எதுவா இருந்தாலும் போர் முடிந்த பிறகுதான்; அமெரிக்க பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

நடந்து வரும் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் உறுதியாக நிராகரித்துள்ளது.

100க்கும் மேற்பட்ட தனது குழந்தைகளுக்கு $17 பில்லியன் சொத்தை உயில் எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

டெலிகிராமின் பில்லியனர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவ், தனது 17 பில்லியன் டாலர் சொத்து முழுவதையும் தன்னை தந்தையாகக் கொண்ட 106 குழந்தைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தல்

திங்கட்கிழமை (ஜூன் 16) சைப்ரஸுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நடந்து வரும் இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அவசரத் தேவையை வலியுறுத்தினார்.

16 Jun 2025
பிரிட்டன்

பிரிட்டனின் வெளிநாட்டு உளவுப்பிரிவான எம்ஐ 6 அமைப்புக்கு முதல் முறையாக பெண் தலைவராக நியமனம்

பிரிட்டன் ரகசிய புலனாய்வு சேவைகளில் ஒன்றான எம்ஐ 6 உளவுத்துறையின் தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

16 Jun 2025
அமெரிக்கா

45 மில்லியன் டாலருக்கு பிரயோஜனமில்லை; சமூக வலைதளங்களில் கேலிக்கூத்தாக மாறிய அமெரிக்க ராணுவ அணிவகுப்பு

அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி உள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் ஈரான்-இஸ்ரேல் தாக்குதல்; 230க்கும் மேற்பட்டோர் பலி

இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ளது, இரு நாடுகளும் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை பரிமாறிக் கொண்டன.