பாகிஸ்தான்: செய்தி
பாகிஸ்தான்-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு
பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே சமீபத்தில் கையெழுத்தான மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Strategic Mutual Defence Agreement) இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் -சவுதி அரேபியா முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து: 'ஒருவர் மீதான தாக்குதல் இருவருக்கும் எதிரான ஆக்கிரமிப்பு'
சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு முக்கிய 'மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டு, தங்கள் நீண்டகால கூட்டாண்மையை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து சர்வதேச போட்டிக்கு கலந்துகொள்ள சென்ற 'போலி' கால்பந்து அணி
ஜப்பானில், பாகிஸ்தானை சேர்ந்த போலி கால்பந்து அணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டிற்கு மனித கடத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மசூத் அசாரின் குடும்பம் ஆபரேஷன் சிந்தூரில் சிதைந்ததாக JeM ஒப்புக்கொள்கிறது
ஜெய்ஷ் -இ-முகமது (JeM) அமைப்பின் உயர்மட்ட தளபதி மசூத் அசாரின் குடும்பத்தினர் பஹாவல்பூரில் நடந்த தாக்குதல்களில் "துண்டு துண்டாக" சிதைந்ததாக அதன் தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இருந்ததற்காக இந்தியா தண்டிக்கப்பட முடியுமா?
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சமீபத்திய ஆசியக் கோப்பை வெற்றி சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது.
ராவி ஆற்று வெள்ளத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தானின் லாகூர் நகரம்
பாகிஸ்தானின் லாகூரில் 40 ராவி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ள நிவாரண நிதியை பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்; பகீர் தகவல்
இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் கட்டி வருகிறது.
ட்ரோன் அச்சுறுத்தல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க இந்திய ராணுவம் சூப்பர் திட்டம்
இந்திய ராணுவம் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தனது வான் கண்காணிப்பு வலையமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
மே 10க்குப் பிறகும் நீடித்த ஆபரேஷன் சிந்தூர்; புதிய தகவலை வெளியிட்ட இந்திய ராணுவத் தளபதி
மானக்ஷா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி, 'ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் ஆழ்ந்த தாக்குதல்களின் சொல்லப்படாத கதை' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்பு
சென்னையில் நடைபெறவிருக்கும் 2025 FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பையை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு (PHF) புறக்கணிக்க வாய்ப்புள்ளது.
CAA: 2024 க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்திய அரசு
மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தானுடனான குடும்ப வணிகத்திற்காக இந்தியாவை வெட்டிவிட்டார் டிரம்ப்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பாகிஸ்தானில் தனது குடும்பத்தின் வணிக நலன்களுக்காக அமெரிக்க-இந்திய உறவுகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆபத்தில் ஆழ்த்துவதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் (NSA) வழக்கறிஞருமான ஜேக் சல்லிவன் குற்றம் சாட்டியுள்ளார்.
SCO மாநாடு:பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இருக்கையில், பிரதமர் மோடி தைரியமாக செய்த செயல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SCO தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையில், பயங்கரவாதம், பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பதாக ஹாக்கி இந்தியா அறிவிப்பு
விளையாட்டுத் துறை ராஜதந்திரத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, பாகிஸ்தான் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் FIH ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்தியா புதிய வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தானுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக வரிகள் அதிகமாக விதிக்கப்படும் எனக்கூறி இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்
மே மாதம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஆயுதப் போரைத் தடுக்க தான் தலையிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன: டிரம்ப் புதிய கூற்று
மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலின் போது ஏழு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதோடு, போர் நிறுத்தம் தாம் நடத்திய மத்தியஸ்த முயற்சியின் விளைவாகத்தான் நடந்தது என கூறியுள்ளார்.
இதுதான் இந்தியா; மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் மக்களின் உயிரைக் காப்பாற்ற வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கியது
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடுமையான ராஜதந்திரப் பதட்டங்கள் நிலவி வந்தாலும், இந்தியா ஒரு வழக்கத்திற்கு மாறான நல்லெண்ண நடவடிக்கையை மேற்கொண்டு, ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் ஏற்படக்கூடிய பெரும் வெள்ள அச்சுறுத்தல் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது.
இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியில் விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 23 வரை நீட்டிப்பு
பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தால் வெளியிடப்பட்ட புதிய விமானப்படையினருக்கான அறிவிப்பின்படி (NOTAM) இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை செப்டம்பர் 23 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக பங்களாதேஷ் அணி சேர்க்கப்பட வாய்ப்பு என தகவல்
ஆகஸ்ட் 29 அன்று தொடங்கவிருக்கும் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 தொடரில், பாகிஸ்தான் பங்கேற்க மறுத்துவிட்டதால், கடைசி நேரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் நிலைமையை தினமும் கண்காணித்து வருகிறதாம் அமெரிக்கா
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை அமெரிக்கா ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.
பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அசிம் முனீர் நிராகரிப்பு
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்புள்ளதாக வரும் ஊகங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தானில் மழை வெள்ளத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
டிரம்ப் இந்தியாவுடன் மோதுவதற்கான காரணங்களை முன்னாள் தூதர் பட்டியலிடுகிறார்
பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் தற்போதைய உறவு ஒரு குறுகிய கால தந்திரோபாய ஏற்பாடாகும் என்றும், அது முதன்மையாக நிதி நலன்களால் இயக்கப்படுகிறது என்றும் முன்னாள் தூதர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.
பாக்., ராணுவ தளபதியின் ஆயுத மிரட்டலுக்குப் பிறகு அமெரிக்கா கூறியது என்ன?
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது உறவு "மாறாமல்" இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது
இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும் வகையில், பாகிஸ்தானின் ISIக்கு ரகசிய தகவல்களை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட DRDO கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கப்போவதாக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மறைமுக மிரட்டல்
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தோல்வி எதிரொலி: இந்திய தூதர்களுக்கு சைலன்ட் டார்ச்சர் தரும் பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களை துன்புறுத்தி வருகிறது.
இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறன் என்ன?
பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்.
பலூசிஸ்தான் குண்டுவெடிப்பில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டன
பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன.
'இப்போ தெரியுதா?': அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானின் அசிம் முனீரின் கூற்றுக்கு இந்தியா பதிலடி
அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் விடுத்த அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதிலளித்துள்ளது.
பாதி உலகத்தை அழிப்போம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா நோக்கி அணுஆயுத மிரட்டல் விடுத்த அசிம் முனீர்
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்காவில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் முக்கிய வெற்றிகளை பற்றி இந்திய விமானப்படைத் தளபதி விளக்கம்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ நடவடிக்கையான "ஆபரேஷன் சிந்தூர்" பற்றிய முக்கிய விவரங்களை விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது 5 பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: IAF தலைவர்
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களும் மற்றொரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது
ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக பாராட்டப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி, இப்போது இங்கிலாந்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
சீனா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் ஏஐ சார்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு; இந்தியாவிற்கு அச்சுறுத்தல்?
பிராந்திய ராணுவ கூட்டணிகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானுடனான சீனாவின் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகள் போர்ச்சுகலில் சொத்துக்களை வாங்கி பணத்தை மோசடி செய்கிறார்கள்!
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நாட்டின் உயர் அதிகாரிகள் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்யும் அமெரிக்கா- 1971ஆம் ஆண்டு நியூஸ் பேப்பர் ஆதாரத்தை கண்டுபிடித்த இந்திய இராணுவம்
செவ்வாயன்று இந்திய ராணுவம் அமெரிக்காவை கிண்டல் செய்து, 1971ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய செய்தித்தாள் துணுக்கை வெளியிட்டது.
பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என எப்படி உறுதி செய்யப்பட்டது?
பாகிஸ்தானிய வாக்காளர் அடையாள அட்டைகள், கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகள் அடங்கிய மைக்ரோ-எஸ்டி சிப் ஆகியவை மீட்கப்பட்டதில், ஜூலை 28 அன்று ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவுக்கு எதிரான எதிர்கால தாக்குதல் எப்படி இருக்கும்? பாகிஸ்தான் கருத்து
எதிர்காலத்தில் இராணுவ மோதல்கள் ஏற்பட்டால், இந்தியாவிற்குள் ஆழமாகத் தாக்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.