LOADING...
இந்தியா வர மறுத்தால் நீக்கம்! வங்கதேசத்திற்கு ஐசிசி விடுத்த இறுதி எச்சரிக்கை
வங்கதேசத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது ICC

இந்தியா வர மறுத்தால் நீக்கம்! வங்கதேசத்திற்கு ஐசிசி விடுத்த இறுதி எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
07:11 pm

செய்தி முன்னோட்டம்

பாதுகாப்பு காரணங்களை கூறி, டி20 உலக கோப்பையில் தனது லீக் போட்டிகளை இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில், இப்போட்டிகளை இலங்கைக்கு மாற்ற கோரி வங்கதேசம் தாக்கல் செய்த தீர்மானம் 14-2 என்ற வாக்கு கணக்கில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் மட்டுமே வங்கதேசத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில், வங்கதேசம், கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஐபிஎல் 2026-ல் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் கசப்புணர்வால், வங்கதேச அரசு தனது அணியை இந்தியா அனுப்ப மறுத்து வருகிறது.

மாற்று இடம்

இலங்கையை மாற்று இடமாக பரிந்துரைத்த பாகிஸ்தான், பங்களாதேஷ்

இலங்கையிலேயே அனைத்து போட்டிகளையும் விளையாடும் வகையில் குழு மாற்றத்தை (Group Swap) வங்கதேசம் கோரியது. இந்த முட்டுக்கட்டையை தீர்க்க ஐசிசி தற்போது ஒரு நாள் கெடு விதித்துள்ளது. ஒருவேளை வங்கதேசம் இந்தியாவிற்கு வரத் தொடர்ந்து மறுத்தால், அந்த அணி தொடரிலிருந்து உடனடியாக நீக்கப்படும். வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி தொடரில் சேர்க்கப்படும் என்று ஐசிசி எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தால் வங்கதேச கிரிக்கெட்டில் குழப்பம் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு வாரியம் எடுக்கப்போகும் இறுதி முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement