தார் ராக்ஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொடுக்கும் மஹிந்திரா?
செய்தி முன்னோட்டம்
மஹிந்திரா நிறுவனம் தங்களது தார் ராக்ஸ் (Thar Roxx) எஸ்யூவி காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் இஞ்சினைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் சென்னையில் இந்த காரின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தற்போது தார் ராக்ஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இஞ்சின் தேர்வுகளுடன் மட்டுமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா
விலை குறைய வாய்ப்பு
1.5 லிட்டர் டீசல் இஞ்சின் அறிமுகப்படுத்தப்பட்டால், டீசல் இன்ஜின் கொண்ட தார் ராக்ஸின் ஆரம்ப விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. புதிய இஞ்சின் மூலம் நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களை ஈர்க்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. மேலும், சோதனையில் இருந்த காரில் சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் 19 இன்ச் அலாய் வீல்கள் காணப்பட்டன. இது AX7 என்ற புதிய வேரியண்ட்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாற்றங்கள் தார் ராக்ஸின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மஹிந்திரா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.