LOADING...
T20 உலகக்கோப்பை 2026: அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்

T20 உலகக்கோப்பை 2026: அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2026
07:17 pm

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் தொடங்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக இந்த முக்கியமான மூன்று போட்டிகளும் எந்த மைதானத்தில் நடக்கும் என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் Hybrid முறையில் நடத்தப்படுகிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையிலேயே நடத்தப்பட வேண்டும் என்ற ஒப்பந்தமே இந்தக் குழப்பத்திற்கு காரணம்.

உத்தேசப் பட்டியல்

மைதானங்களின் உத்தேசப் பட்டியல்

ஐசிசி வெளியிட்டுள்ள நிபந்தனைகளின்படி மைதானங்கள் பின்வருமாறு மாற வாய்ப்புள்ளது: 1. முதல் அரையிறுதி (மார்ச் 4): பாகிஸ்தான் அல்லது இலங்கை (இந்தியாவுக்கு எதிராக இல்லாவிட்டால்) தகுதி பெற்றால் இந்த போட்டி கொழும்புவில் நடக்கும். இல்லையெனில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும். 2. இரண்டாவது அரையிறுதி (மார்ச் 5): இது மும்பை வான்கடே மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. 3. இறுதிப்போட்டி (மார்ச் 8): பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் போட்டி கொழும்புவுக்கு மாற்றப்படும். இல்லையெனில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.

சிக்கல்

ரசிகர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்

மைதானம் எதுவென்றே தெரியாமல் ரசிகர்கள் டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். போட்டி நடைபெறும் நகரம் கடைசி நேரத்தில் மாறினால், டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என ஐசிசி உறுதியளித்துள்ளது. இருப்பினும், ரசிகர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் கட்டணங்களுக்கு ஐசிசி பொறுப்பேற்காது. இது வெளிநாட்டு மற்றும் வெளியூர் ரசிகர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Advertisement