LOADING...
இந்தியாவில் உள்ள சமையல் எரிவாயு இணைப்புகள் எவ்வளவு? தமிழகத்திற்கு எந்த இடம்?
சமையல் எரிவாயு

இந்தியாவில் உள்ள சமையல் எரிவாயு இணைப்புகள் எவ்வளவு? தமிழகத்திற்கு எந்த இடம்?

எழுதியவர் Prasanna
Mar 12, 2026
11:33 am

செய்தி முன்னோட்டம்

LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எவ்வளவு சமையல் எரிவாயு இணைப்புகள் இருக்கின்றன என்பது குறித்த தரவுகள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் சுமார் 33 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் தற்சமயம் இருக்கின்றன. அதில் முதலிடத்தில் உத்தர பிரதேச மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலத்தில் சுமார் 4.85 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருக்கின்றன.

LPG

தமிழகத்திற்கு எந்த இடம்?

இதனைத் தொடர்ந்து மகராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கின்றன. மகாரஷ்டிராவில் 3.18 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளும், மேற்கு வங்கத்தில் 2.72 லட்சம் கோடி இணைப்புகளும் உள்ளன. தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. இங்கே 2.38 கோடி வீடுகளில் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் 98 லட்சம் இணைப்புகள் இருக்கின்றன. குறைந்தபட்சமாக லட்சத்தீவுகளே 10,000 இணைப்புகளை மட்டும் கொண்டுள்ளது. அதற்கடுத்ததாக லடாக்கில் 1 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே உள்ளன.

Advertisement