LOADING...
"இந்தியா போருக்கு தயாராகிறது!": பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு
அரசியல் லாபத்திற்காக இந்தியா நீரை ஆயுதமாக பயன்படுத்துவதாக ஜர்தாரி சாடினார்

"இந்தியா போருக்கு தயாராகிறது!": பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2026
11:55 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார். பிராந்திய அமைதியை விரும்புபவன் என்ற முறையில், போரை தவிர்த்து பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு அவர் இந்தியாவை வலியுறுத்தினார். அத்துடன், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதை "நீர்ப் பயங்கரவாதம்" என்று அவர் விமர்சித்தார். அரசியல் லாபத்திற்காக இந்தியா நீரை ஆயுதமாக பயன்படுத்துவதாக அவர் சாடினார். காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை தெற்காசியாவில் நிரந்தர அமைதி ஏற்படாது என்றும், காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தார்மீக ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்கள் குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டிய ஜர்தாரி, ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தி பாகிஸ்தானை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்தார். "பாகிஸ்தான் மண் புனிதமானது; அண்டை நாடுகள் தங்கள் மண்ணை மற்றவர்களின் லட்சியங்களுக்கான போர்க்களமாக மாற்ற வேண்டாம்" என்று தலிபான் அரசை கேட்டுக்கொண்டார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்த அவர், வளைகுடா நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்தார். 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைய பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் என அவர் உறுதிபடக் கூறினார்.

Advertisement