Loading...

போர்: செய்தி

10 Aug 2026
ஈரான்

மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடம்? அப்போது ஈரான்- அமெரிக்கா போர் என்னவாகும்?

ஈரானின் சுப்ரீம் லீடர் மொஜ்தபா கமேனி, அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வருவதாக வெளியாகும் செய்திகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய விமானப்படையில் புதிய வரலாறு! 'டாப் கன்' தகுதியைப் பெற்ற முதல் பெண் போர் விமானி பாவனா காந்த்

இந்திய விமானப்படையின் முன்னணிப் பெண் போர் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், குவாலியரில் உள்ள பிரசித்தி பெற்ற TACDE பயிற்சி மையத்தில் 'ஃபைட்டர் காம்பாட் லீடர்' (FCL) படிப்பை வெற்றிகரமாக முடித்து நாட்டின் முதல் பெண் 'டாப் கன்' (Top Gun) போர் விமானியாக வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

07 Aug 2026
ஈரான்

"எங்களிடம் ஏவுகணை தட்டுப்பாடு இல்லை": ஈரான் போருக்கு நடுவே பரவிய செய்திகளுக்கு டிரம்ப் அளித்த விளக்கம்

ஈரானுடனான ஐந்து மாத கால தீவிர போருக்கு இடையே, அமெரிக்க இராணுவத்தின் பிரதான தொலைதூர துல்லிய ஏவுகணை கையிருப்பு ஆபத்தான அளவில் குறைந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

04 Aug 2026
அமெரிக்கா

'தலைமை தகர்க்கப்படும்': ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த இறுதி கெடு

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய தலைமையை தகர்க்கும் பிரம்மாண்டமான ராணுவ தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக, அந்நாட்டிற்கு ஒரு "கடைசி வாய்ப்பு" வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

02 Aug 2026
அமெரிக்கா

போர் தீவிரமடைய வாய்ப்பு! அமெரிக்கர்களை வெளியேற அறிவுறுத்திய தூதரகங்கள்! ஈரானின் எரிசக்தி மையங்களைக் குறிவைக்கத் திட்டம்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பிப்ரவரி மாதம் தொடங்கிய ராணுவ மோதல்கள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்கத் தூதரகங்கள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.

31 Jul 2026
உலகம்

இரண்டு கணிப்புகள் நிஜமாகிவிட்டது! ஆர்க்டிக் பகுதியில் புதிய போர் மூளும்! வாழும் நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

எதிர்கால உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பதாகக் கூறிக்கொள்ளும் 'வாழும் நாஸ்ட்ராடாமஸ்' என அழைக்கப்படும் அதோஸ் சலோம், 2026 ஆம் ஆண்டிற்காகத் தான் வெளியிட்ட 10 கணிப்புகளில் இரண்டு கணிப்புகள் ஏற்கனவே உண்மையாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

31 Jul 2026
ஈரான்

மேற்கு ஆசிய மோதலில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போர் சூழலில் சிக்கி இதுவரை 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 Jul 2026
அமெரிக்கா

F-35 விமானத்தின் திறன்களைக் கொண்ட ஆளில்லா போர் விமானத்தை உருவாக்க விரும்பும் இஸ்ரேல்

ப்ளூம்பெர்க் தகவலின்படி, அமெரிக்கா வழங்கிய F-35 ஸ்டெல்த் போர் விமானத்திற்கு இணையான திறன்களைக் கொண்ட, ஆளில்லா போர் விமானத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

29 Jul 2026
ரஷ்யா

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதாவிற்கு அமெரிக்கா செனட் ஆதரவு; இந்தியா 100% வரியை எதிர்கொள்ளும் அபாயம்

ரஷ்ய எரிசக்தி தடைகள் தொடர்பான சட்ட மசோதாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்; 86-12 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது.

26 Jul 2026
ஈரான்

ஈரான் மீதான தாக்குதல் திடீர் நிறுத்தம்! அமெரிக்காவுக்கு ஏவுகணை தட்டுப்பாடா?

ஈரான் மீதான தொடர் 13 நாள் வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகளிடம் ஏவுகணைகளின் இருப்பு கணிசமாகக் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 Jul 2026
ரஷ்யா

ரஷ்யா - உக்ரைன் இடையே தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

24 Jul 2026
அமெரிக்கா

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்: தீவிரமடையும் பதற்றம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய புதிய போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

22 Jul 2026
ஈரான்

அமெரிக்கா - ஈரான் போர்: $37.5 பில்லியனைத் தாண்டிய ராணுவச் செலவு; கூடுதல் நிதி கோரும் பென்டகன்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்காக இதுவரை $37.5 பில்லியன்(சுமார் ₹3.1 லட்சம் கோடிக்கும் அதிகம்) செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அந்நாட்டு நாடாளுமன்ற எம்பிக்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் போர் 10-வது நாளாக நீடிப்பு: ஈரானின் ராணுவ மையங்கள் தகர்ப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களை முடக்கும் நோக்கில், தொடர்ந்து 10-வது இரவாக ஈரான் மீது அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலின் வீடியோவை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ளது.

21 Jul 2026
உக்ரைன்

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி! மத்திய அரசு கடும் கண்டனம்

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளப் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

15 Jul 2026
உக்ரைன்

ரஷ்யாவை அணு ஆயுதப் பயன்பாட்டிலிருந்து தடுத்தாரா பிரதமர் மோடி? போலந்து அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

உக்ரைன் போரின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப பயன்படுத்துவதை தடுப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியப் பங்காற்றினார் என்று போலந்து நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிஸ்லாவ் தியோபில் பார்டோசெவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஒரு கப்பலுக்கு ரூ.270 கோடியா? டொனால்ட் டிரம்ப் விதிக்கும் 'கார்டியன் ஏஞ்சல்' கட்டணத்தால் அதிரும் உலக கச்சா எண்ணெய் சந்தை

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவீத பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு, உலக அளவில் கச்சா எண்ணெய் விலையையும், கப்பல் போக்குவரத்தையும் வரலாறு காணாத வகையில் பாதிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

14 Jul 2026
அமெரிக்கா

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் சேதம்; இந்திய மாலுமி பரிதாப பலி

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

13 Jul 2026
ஈரான்

ஈரானில் தரையிறங்கிய ரஷ்யாவின் 'Doomsday' சிறப்பு விமானம்; உலக நாடுகளை அதிரவைத்த மாஸ்கோவின் நகர்வு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் மிக முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட போர் கட்டுப்பாட்டு விமானமான 'Tu-214PU' திடீரென ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது.

13 Jul 2026
அமெரிக்கா

வளைகுடா பகுதியில் நடத்திய எதிர் தாக்குதலில் அமெரிக்காவின் பேட்ரியாட் அமைப்புகளை அழித்ததாக கூறும் ஈரான்

வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள், வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் ஆளில்லா விமான உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக கூறி, ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு பெரும் எதிர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது.

10 Jul 2026
அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புதிய சதி திட்டம்; அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஈரானின் "புதிய சதி திட்டம்" ஒன்றை தங்களின் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை

ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.

09 Jul 2026
ஈரான்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் விடிய விடிய பயங்கர குண்டுமழை; பற்றி எரியும் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள்

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் முற்றிலும் முறிந்ததைத்தொடர்ந்து, ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் முக்கிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

08 Jul 2026
அமெரிக்கா

"இன்னைக்கு ராத்திரியும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்": ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிய டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மிக உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

06 Jul 2026
அமெரிக்கா

'இஸ்ரேலின் பலமிக்க நண்பன் இந்தியா': அமெரிக்காவுக்கு நெதன்யாகுவின் சாட்டையடி பதில்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலின் ஒரே கூட்டாளி அல்ல என்றும், தங்களுக்கு இந்தியா போன்ற பலமிக்க நட்பு நாடுகள் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

03 Jul 2026
ஈரான்

4 மாதங்களாக பாதுகாக்கப்பட்ட உடல்; ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு தள்ளிப்போனது ஏன்?

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட போதிலும், அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் சுமார் 131 நாட்கள் (4 மாதங்களுக்கும் மேல்) தாமதத்திற்கு பிறகே தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளன.

03 Jul 2026
ஈரான்

ஈரான் தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல்; ரகசியமாக எச்சரித்த அமெரிக்கா

மத்திய கிழக்கில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ட்ரோன் தாக்குதல்; ISIS-K முகாம்கள் அழிப்பு

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லைப் பதற்றம் தற்பொழுது ஒரு புதிய போர் சூழலாக மாறியுள்ளது.

29 Jun 2026
ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி மேலாண்மை குறித்து ஈரான், ஓமான் முதல் சந்திப்பை நடத்தின

ஈரானும் ஓமானும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான கூட்டுக் குழுவின் தொடக்க கூட்டத்தை திங்களன்று நடத்தின.

29 Jun 2026
அமெரிக்கா

உலக நாடுகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு! அமெரிக்கா - ஈரான் இடையே கத்தாரில் நாளை அவசரக் கூட்டம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி போர் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், கடந்த வாரயிறுதியில் பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மீண்டும் பரஸ்பரம் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி: போர் காலத்திற்கு முந்தைய நிலைக்குச் சென்ற பிரெண்ட் குரூட் ஆயில்!

உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த பதற்றங்கள் தணிந்து, எண்ணெய் விலையானது அமெரிக்கா - ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்குக் கீழ் சரிந்துள்ளது.

23 Jun 2026
ஈரான்

ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகள் ஆகஸ்ட் 21 வரை இடைநிறுத்தம்

ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு அமெரிக்கா 60 நாள் விலக்கு அளித்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்த சர்ச்சை: இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் மிரட்டல்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியா அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவின் மீது போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார்.

22 Jun 2026
அமெரிக்கா

டிரம்ப் எச்சரிக்கையால் வெளிநடப்பு செய்த ஈரான் குழு; சுவிஸ் பேச்சுவார்த்தை திடீர் நிறுத்தம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பல மாத கால மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா -ஈரான் ஒப்பந்தத்தின் முதல் வெற்றி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் வந்தடைந்தது இந்தியாவின் முதல் LNG கப்பல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்றரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரினால் முடக்கப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, பாதுகாப்பாக கடந்து இந்தியாவின் முதல் LNG கப்பல்-'திஷா' குஜராத்தின் தாகேஜ் துறைமுகத்தை வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தது.

19 Jun 2026
அமெரிக்கா

ஈரான் மீதான கடல் முற்றுகையை நீக்க டிரம்ப் உத்தரவு; நிம்மதிப் பெருமூச்சு விடும் உலக நாடுகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடல்சார் ராணுவ முற்றுகையை அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளன.

19 Jun 2026
அமெரிக்கா

அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்: "இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடு நாங்கள் மட்டும்தான்"

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், நீண்டகால நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தற்பொழுது ஒரு பெரிய ராஜதந்திரப் போராக வெடித்துள்ளது.

19 Jun 2026
அமெரிக்கா

ஈரான் அமைதி ஒப்பந்தம்: அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்த ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த வளைகுடா போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி கடுமையாக சாடியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 Jun 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த போரின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் இழப்புகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் தற்காலிகப் போர் நிறுத்தம் ஒருவேளை நீடித்தால், உலக வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்த போர்களில் ஒன்றாக இது கருதப்படும்.

18 Jun 2026
பிரான்ஸ்

உலகப்போரை முடித்த வெர்சாய்ஸ் அரண்மனையில் அமெரிக்கா-ஈரான் போரும் முடிவுக்கு வந்த வரலாற்று தருணம்

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

18 Jun 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தான 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இதோ!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் இணக்கப்பாட்டின் அசல் நகலை பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

18 Jun 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: 4 மாத போருக்கு அதிகாரப்பூர்வ முற்றுப்புள்ளி

சர்வதேச அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, கடந்த நான்கு மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் (MoU) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.

16 Jun 2026
அமெரிக்கா

முடிவுக்கு வந்த போரிலும் மூண்ட புதிய சர்ச்சை:அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்த முரண்பாடுகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் தங்கள் 4 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து 60 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

16 Jun 2026
அமெரிக்கா

ஈரானுக்கு பணம் தருகிறதா அமெரிக்கா? அது பொய்யென டொனால்ட் டிரம்ப் ட்வீட்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே 4 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்டப் போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பரவி வரும் சில நிதியுதவித் தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

15 Jun 2026
அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு: கப்பல்களுக்கு புதிய கட்டணம் விதிக்கும் ஈரான்?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போர், ஒருவழியாக எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.