ரஷ்யா: செய்தி
ரஷ்யாவின் கூட்டாளிகள் மீதான 500% கட்டணத் திட்டங்களை ஆதரித்த டிரம்ப்; இந்தியாவும் இதில் அடங்கும்
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500% வரை வரி விதிக்கும் புதிய செனட் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்காத இந்தியா; தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பு
உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது.
அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் முன்னேற்றம்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'உலகை 150 முறை தகர்க்க போதுமான அணுகுண்டுகள் நம்மிடம் உள்ளன': எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தனது முடிவை ஆதரித்து, வாஷிங்டன் மட்டுமே தனது ஆயுதங்களை சோதிக்காத நாடாக இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் Khabarovsk அறிமுகம்
ரஷ்யாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக, சக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Khabarovsk ஐ அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
ரஷ்யாவின் அணுசக்தி மூலம் இயங்கும் புரேவெஸ்ட்னிக் ஏவுகணை சோதனை வெற்றி; உறுதிப்படுத்தினார் புடின்
அணுசக்தி மூலம் இயங்கும் மற்றும் சாத்தியமான வரம்பற்ற இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட புரேவெஸ்ட்னிக் க்ரூஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) அறிவித்தார்.
உங்கள் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்: அமெரிக்காவின் தடைகளுக்கு அதிபர் புடின் கண்டனம்
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்க தடைகளுக்கு கடுமையான எதிர்வினையாக, வாஷிங்டன் அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் மாஸ்கோ ஒருபோதும் அடிபணியாது என்று அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்தார்.
அமெரிக்க தடைகள் அமலுக்கு வந்ததால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்திய நிறுவனங்கள் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா விதித்த புதிய தடைகளை தொடர்ந்து, இந்தியா தனது மிகப்பெரிய சப்ளையரான ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கடுமையாக குறைக்கும் என்று வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்துமென மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூறுகிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட உறுதிமொழியை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை "கடுமையாக குறைக்கும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனை புடின் அழித்துவிடுவார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடந்த சந்திப்பு, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று டிரம்ப் ஆக்ரோஷமாக வலியுறுத்தியதால், கடுமையான சத்தமிடும் சண்டையாக மாறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா தொடர்ந்து அதிகபட்ச வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார்.
இந்திய ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை முழுமையாக நிறுத்துவதாகத் தனக்கு உறுதியளித்ததாக மீண்டும் கூறியுள்ளார்.
காசா போர் ஓவர், அடுத்தது ரஷ்யா-உக்ரைன் போர்; புடினை நேரில் சந்திக்கவுள்ளார் டிரம்ப்
உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, புடாபெஸ்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய் குறித்து மோடி-டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்கள் ஏதும் நடக்கவில்லை: MEA
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு தொலைபேசியில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைப்பதாக டிரம்ப் கூறியதற்கு மத்திய அரசு பதில் இதுதான்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்; சீனாவிற்கும் நெருக்கடி தரப்போகிறாராம்!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளில் புதிய மைல்கல்; டெல்லியிலிருந்து அனுப்பிய புத்தரின் புனிதச் சின்னங்கள் கல்மியாவை அடைந்தது
இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புத்தரின் புனிதச் சின்னங்கள் ரஷ்யாவின் கல்மியா குடியரசின் தலைநகரான எலிஸ்டாவை சென்றடைந்துள்ளன.
அஜர்பைஜான் ஜெட் விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாதான்: விளாடிமிர் புடின் முதல்முறையாக ஒப்புதல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு 38 பேர் உயிரிழந்த ஒரு அஜர்பைஜான் ஜெட் விமானத்தை ரஷ்ய விமானப் பாதுகாப்பு அமைப்புகளே சுட்டு வீழ்த்தியதாக வியாழக்கிழமை (அக்டோபர் 9) ஒப்புக்கொண்டுள்ளார்.
ரஷ்ய ராணுவத்திற்காக போராட சென்ற இந்தியர் உக்ரைன் படைகளால் பிடிப்பட்டார்
உக்ரைனின் 63வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவு, இந்திய நாட்டவரான மஜோதி சாஹில் முகமது ஹுசைனை கைப்பற்றியதாக கூறியுள்ளது.
கூடுதலாக 5 எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியா தீவிரம்; இந்தியாவிலேயே தயாரிக்கவும் பேச்சுவார்த்தை
இந்தியாவின் உயர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்து மேலும் ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவது குறித்து இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
உக்ரைனின் ரயில் நிலையம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்; 30 பேர் காயம்
உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதில் என்ன தவறு என கேட்கும் புடின்
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார்.
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின் - இருநாட்டு உறவுக்கு புதிய உத்வேகம்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தாண்டு டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி புடின் பேச்சு குறித்த நேட்டோ தலைவரின் கருத்து பொய்; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் தொடர்புகொண்டு உக்ரைன் போர் உத்தி குறித்து விளக்கம் கேட்கும்படி பிரதமர் நரேந்திர மோடியைத் தூண்டியது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கூறிய கூற்றை, இந்தியா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
திடீரென எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்த ரஷ்யா: இது இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது?
ஒரு பெரிய முன்னேற்றத்தில், ரஷ்யா டீசல் ஏற்றுமதிக்கு பகுதியளவு தடை விதித்து அறிவித்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து நாடுகளுக்கும் பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏற்கனவே உள்ள தடையை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளது.
உக்ரைன் போரின் உத்தி குறித்து ரஷ்யாவிடம் இந்தியா விளக்கம் கேட்டதாக நேட்டோ தலைவர் தகவல்
அமெரிக்கா விதித்துள்ள வரிக் கட்டணங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, உக்ரைன் போரின் வியூகம் குறித்து ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
நிபந்தனையுடன் ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவிடம் ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிவு
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே எஞ்சியிருக்கும் கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தமான புதிய START (New Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார்.
'நாங்க ரொம்ப கிளோஸ் பிரெண்ட்ஸ்': இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்
பல மாதங்களாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து வரி அச்சுறுத்தல்கள் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது தொனியை மென்மையாக்கியுள்ளார்.
"இந்தியா-ரஷ்யா உறவை முறிக்கும் முயற்சி தோல்வியடையும்": டிரம்ப் முயற்சிக்கு ரஷ்யா கடும் பதிலடி
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவைப் பாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று, 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்திய ரஷ்யா
மூன்றரை ஆண்டுகால மோதலைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இராஜதந்திர முயற்சிகள் தேக்கமடைந்துள்ளதால், உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ரஷ்ய ட்ரோன்கள் வான்வெளிக்குள் நுழைந்ததை அடுத்து உஷார் நிலையில் போலந்து; விமான நிலையங்கள் மூடல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் போது அதன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ட்ரோன்களை போலந்து இராணுவம் புதன்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
இந்தியா, சீனா மீது 100% வரிகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரை வரிகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 'இரண்டாம் கட்ட' தடைகளுக்கு அமெரிக்கா திட்டமா?
ரஷ்யாவிற்கு எதிரான "இரண்டாம் கட்ட" தடைகளுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.
உக்ரைன் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; பதிலடி கொடுத்த உக்ரைன்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள கேபினட் உட்பட அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.
புற்றுநோயாளிகளுக்கான புதிய நம்பிக்கை; 100% தடுக்கும் திறன் கொண்ட தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தகவல்
ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட எண்டெரோமிக்ஸ் (EnteroMix) என்ற புதிய சோதனைப் புற்றுநோய் தடுப்பூசி, நோய் எதிர்ப்புக்கான அதன் தனித்துவமான அணுகுமுறைக்காக உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக டிராகன், யானையுடன் கரடியை இணைத்த ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசுகையில், இந்தியா-சீனா உறவை விளக்குவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்திய டிராகன் மற்றும் யானை என்ற உருவகத்தை மேலும் விரிவாக்கி, அதில் ரஷ்யாவின் கரடியையும் இணைத்தார்.
"இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்": வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார் டிரம்ப்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(SCO) உச்சி மாநாட்டில் மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றாகக் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா, இந்தியாவையும், ரஷ்யாவையும் "இருண்ட" சீனாவிடம் "இழந்து விட்டது" என்று அமெரிக்கா கூறியுள்ளது.
புடின், கிம்மை ஜி கலந்து கொண்ட சீனாவின் மாபெரும் ராணுவ அணிவகுப்பு; கடுப்பானது அமெரிக்கா
சீனா தனது மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை இன்று நடத்தியது.
அமெரிக்காவின் வரிகளுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் மற்றும் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்
இந்தியாவும், ரஷ்யாவும் S-400 தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளை கூடுதலாக வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு ஏற்றுமதி அதிகாரி ஒருவர் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS-இடம் தெரிவித்தார்.