LOADING...
கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல...புதையல் தீவு! ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்
கிரீன்லாண்டில் ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்

கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல...புதையல் தீவு! ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 22, 2026
09:48 am

செய்தி முன்னோட்டம்

WEF 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த சந்திப்பிற்கு பிறகு, கிரீன்லாந்து தொடர்பாக ஒரு ஒப்பந்த கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். "கிரீன்லாந்து மற்றும் ஒட்டுமொத்த ஆர்க்டிக் பகுதி தொடர்பாக வருங்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த வர்த்தக வரிகள் ரத்து செய்யப்படுகின்றன," என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பாக 'கோல்டன் டோம்' மற்றும் கனிம வளங்கள் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. "அவர்கள் கோல்டன் டோமில் ஈடுபடப் போகிறார்கள், அவர்கள் கனிம உரிமைகளில் ஈடுபடப் போகிறார்கள், நாங்களும் அப்படித்தான்" என்று டிரம்ப் கூறினார்.

கோல்டன் டோம்

'கோல்டன் டோம்' (The Golden Dome) என்றால் என்ன?

இது இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' (Iron Dome) போன்ற ஒரு அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பாகும். ஆர்க்டிக் பகுதி வழியாக அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் மீது ஏவப்படும் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிப்பதே இதன் முக்கிய நோக்கம். கிரீன்லாந்து வட துருவத்திற்கு மிக அருகில் இருப்பதால், ரஷ்யா அல்லது சீனாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்டறிய இது ஒரு சிறந்த இடமாகும். இந்த அமைப்பில் நேட்டோ நாடுகளையும் இணைத்துக்கொள்வதன் மூலம், ஒட்டுமொட்டு ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்க ட்ரம்ப் திட்டமிடுகிறார்.

கனிம வளங்கள்

கிரீன்லாந்தின் கனிம வளங்கள்

கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல; அது ஒரு "புதையல் தீவு" என்று அழைக்கப்படுகிறது. அரிய மண் தனிமங்கள் (Rare Earth Elements): ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் (EV), பேட்டரிகள் மற்றும் அதிநவீன ராணுவ தளவாடங்கள் தயாரிக்க தேவையான அரிய வகை கனிமங்கள் இங்குப் பெருமளவில் உள்ளன. தற்போது இதில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால், மாற்று இடமாக அமெரிக்கா இதைக் கருதுகிறது. எரிசக்தி: இங்குப் பெருமளவிலான யுரேனியம், துத்தநாகம் (Zinc), தங்கம் மற்றும் இரும்புத் தாதுக்கள் உள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு: ஆர்க்டிக் பெருங்கடலுக்கு அடியில் இன்னும் கண்டறியப்படாத சுமார் 13% கச்சா எண்ணெய் மற்றும் 30% இயற்கை எரிவாயு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Advertisement

பிளான்

ட்ரம்ப்பின் 'மாஸ்டர் பிளான்' என்ன?

கிரீன்லாந்தை முழுமையாக வாங்க முடியாவிட்டாலும், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் பின்வரும் நன்மைகளை அமெரிக்கா அடைய முயல்கிறது: சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்தல்: கிரீன்லாந்தின் சுரங்கத் துறையில் சீனா முதலீடு செய்வதைத் தடுத்து, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகள் அந்த உரிமைகளைப் பெறுவது. புவிசார் அரசியல்: ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ராணுவப் பலத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் அமெரிக்கத் தளங்களை வலுப்படுத்துவது. பொருளாதார லாபம்: அங்குள்ள கனிமங்களை வெட்டியெடுப்பதன் மூலம் அமெரிக்கத் தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களைக் குறைந்த விலையில் பெறுவது.

Advertisement

ஐரோப்பா

ஒப்பந்தத்தின் ஐரோப்பா மீதான தாக்கம்

ஒரு முக்கியமான தருணத்தில் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகள் மீதான அழுத்தத்தை டிரம்பின் அறிவிப்பு குறைப்பதாக தோன்றுகிறது. ஆர்க்டிக்கில் அமெரிக்காவின் லட்சியங்களை தடுப்பதாக அவர் குற்றம் சாட்டிய எட்டு ஐரோப்பிய நாடுகளை இலக்காகக் கொண்ட வரி அச்சுறுத்தலையும் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகு டிரம்ப் வாபஸ் பெற்றுள்ளார். முன்னதாக அமெரிக்காவின் வரி மற்றும் நிலைப்பாடு குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் வியாழக்கிழமை (இன்று) பிரஸ்ஸல்ஸில் அவசர உச்சிமாநாட்டிற்காக கூட இருந்தனர். தற்போது, வரி விதிப்பிலிருந்து பின்வாங்குவதாக டிரம்பின் முடிவு, உச்சிமாநாட்டின் மீதான பதற்றத்தை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய தலைவர்கள் இன்னும் அமெரிக்காவும் நேட்டோவும் என்ன ஒப்புக்கொண்டன என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.

Advertisement