LOADING...
மூச்சுத்திணறும் செயற்கை நுண்ணறிவு! ஏஐ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் அந்த ஒரு காரணம்
கூகுள் டீப்மைண்ட் தலைவர் டெமிஸ் ஹசாபிஸ் எச்சரிக்கை

மூச்சுத்திணறும் செயற்கை நுண்ணறிவு! ஏஐ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் அந்த ஒரு காரணம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 22, 2026
10:03 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், அந்த வளர்ச்சி விரைவில் ஒரு நெருக்கடிப் புள்ளியை (Choke point) எட்டும் என்று கூகுள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் எச்சரித்துள்ளார். 2026 ஆம் ஆண்டில் ஏஐ மாடல்கள் மிகச் சிறந்த திறன்களைக் கொண்டிருந்தாலும், அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்தத் தேவையான மெமரி சிப்கள் தட்டுப்பாடு மிகப்பெரிய தடையாக உருவெடுத்துள்ளது.

காரணம்

ஏன் இந்தத் தட்டுப்பாடு?

ஏஐ தரவு மையங்கள் இயங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஜிபியுக்கள் (GPUs) மற்றும் அதிகப்படியான கணினித் திறன் தேவை. புதிய ஏஐ ஐடியாக்களைப் பெரிய அளவில் சோதித்துப் பார்க்க ஏராளமான சிப்கள் தேவைப்படும். ஆனால் தற்போது நிலவும் தட்டுப்பாட்டால், புதிய கண்டுபிடிப்புகளை சோதிப்பது கடினமாகியுள்ளது என ஹசாபிஸ் சிஎன்பிசி நேர்காணலில் தெரிவித்துள்ளார். இந்த சிப் தட்டுப்பாட்டினால் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.

முதலீடு

கூகுளின் நிலைப்பாடு மற்றும் முதலீடு

கூகுள் நிறுவனம் சொந்தமாக டென்சார் பிராசஸிங் யூனிட்களை தயாரித்தாலும், சில முக்கிய உதிரிபாகங்களுக்கு குறிப்பிட்ட சில வெளிநாட்டு நிறுவனங்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. மெமரி சிப் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சாம்சங், மைக்ரான் மற்றும் எஸ்கே ஹைனிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து விநியோகத்தை உறுதி செய்ய கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ள, 2026 ஆம் ஆண்டில் ஏஐ தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்காக மட்டும் சுமார் $175 பில்லியன் முதல் $185 பில்லியன் வரை செலவிட கூகுள் திட்டமிட்டுள்ளது.

Advertisement

சவால்கள்

எதிர்கால சவால்கள்

தற்போது கூகுள் வெளியிட்டுள்ள ஜெமினி 3.1 ப்ரோ போன்ற மாடல்கள் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், தேவைக்கேற்ப இந்தச் சேவைகளை வழங்க முடியாத அளவிற்கு மெமரி சிப் தட்டுப்பாடு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்தத் தட்டுப்பாடு 2026 இறுதி வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ஏஐ நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி வேகத்தை சற்று குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement