LOADING...
நிலவுக்கு செல்வதில் மீண்டும் சிக்கல்; கடைசி நேரத்தில் ஆர்ட்டெமிஸ் II மிஷனை நிறுத்தியது நாசா
ஆர்ட்டெமிஸ் II விண்கலம் ஏவுவதில் தாமதம்

நிலவுக்கு செல்வதில் மீண்டும் சிக்கல்; கடைசி நேரத்தில் ஆர்ட்டெமிஸ் II மிஷனை நிறுத்தியது நாசா

எழுதியவர் Sekar Chinnappan
Feb 22, 2026
08:37 am

செய்தி முன்னோட்டம்

அரை நூற்றாண்டுக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் வரலாற்று சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் II விண்கலம் ஏவுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மார்ச் 6, 2026 அன்று திட்டமிடப்பட்டிருந்த இந்த ஏவுதல் முயற்சி, ராக்கெட்டில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

காரணம்

தாமதத்திற்கான காரணம்: ஹீலியம் ஓட்டப் பிரச்சினை

ராக்கெட்டின் இறுதிச் சோதனைகளின் போது, அதன் மேல் நிலையில் உள்ள ஹீலியம் வாயு ஓட்டத்தில் சீரற்ற தன்மை இருப்பதை பொறியாளர்கள் கண்டறிந்தனர். ஹீலியத்தின் முக்கியத்துவம்: ராக்கெட்டின் எரிபொருள் டாங்கிகளில் அழுத்தத்தைப் பராமரிக்கவும், என்ஜின் பாகங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் ஹீலியம் மிக முக்கியமானது. முடிவு: "எந்தவொரு சிறிய சிக்கலையும் அலட்சியப்படுத்த முடியாது" என்று கூறிய நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன், ராக்கெட்டை மீண்டும் பணிமனைக்கு கொண்டு சென்று சரிபார்க்க உத்தரவிட்டுள்ளார். இதனால் மார்ச் 6 ஆம் தேதி ஏவுவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக ரத்தாகியுள்ளது.

புதிய தேதிகள்

தள்ளிப்போகும் புதிய தேதிகள்

நாசாவின் தற்போதைய திட்டப்படி, மார்ச் மாதத்தில் ஏவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அடுத்த வாய்ப்பு: மார்ச் மாதத்தில் ஏவ முடியாவிட்டால், அடுத்த ஏவுதல் ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 3-6 ஆகிய தேதிகளில் அமையும். வெட் ரிஹர்சல்: முன்னதாக பிப்ரவரி 19-ம் தேதி நடத்தப்பட்ட எரிபொருள் நிரப்பும் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், அதன் பிறகு நடத்தப்பட்ட சரிபார்ப்பிலேயே இந்த ஹீலியம் சிக்கல் முளைத்துள்ளது.

Advertisement

நோக்கம்

ஆர்ட்டெமிஸ் II மிஷனின் நோக்கம்

இந்த 10 நாள் பயணத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வந்து பூமிக்குத் திரும்புவார்கள்: ரீட் வைஸ்மேன் (கமாண்டர்) விக்டர் குளோவர் (பைலட்) கிறிஸ்டினா கோக் (மிஷன் ஸ்பெஷலிஸ்ட்) ஜெரமி ஹேன்சன் (கனடா விண்வெளி வீரர்) இந்த மிஷன் நிலவில் தரை இறங்காது என்றாலும், நிலவின் மறுபக்கத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் முதல் பயணமாக இது அமையும். இது 2028 இல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ட்டெமிஸ் III (நிலவில் மனிதர்கள் தரை இறங்கும் மிஷன்) திட்டத்திற்கு அடித்தளமாக அமையும்.

Advertisement