LOADING...
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதா இந்தியா? அமெரிக்காவின் 25% வரிக்கு பணிந்ததா புது டெல்லி?
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதா இந்தியா? அமெரிக்காவின் 25% வரிக்கு பணிந்ததா புது டெல்லி?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
09:20 am

செய்தி முன்னோட்டம்

உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் புதன்கிழமை தெரிவித்துள்ளார். பாக்ஸ் நியூஸ்-ற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 25% வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது இறக்குமதியை குறைத்துக்கொண்டு தற்போது அதை நிறுத்தியுள்ளதாக பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வரி

மேலும் 500% வரி விதிக்கும் ரஷ்யா பொருளாதாரத் தடை மசோதா

ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை மிகக்கடுமையான வரி விதிக்க அனுமதிக்கும் 'ரஷ்யா பொருளாதாரத் தடை மசோதா' தற்போது அமெரிக்க செனட் சபையின் பரிசீலனையில் உள்ளது. இருப்பினும், இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுப்பதாக தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகள் மற்றும் 500% அபராத வரி குறித்த எச்சரிக்கைகள் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் ரஷ்ய எண்ணெயை வாங்கி வருவதாக குற்றம் சாட்டிய பெசென்ட், இந்தியா இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement