பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் S-400! ரூ.10,000 கோடியில் ஏவுகணைகளை அள்ளும் இந்தியா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் எல்லை பாதுகாப்பு மற்றும் வான்வழி தற்காப்பு திறனை மேம்படுத்தும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து 288 S-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் பச்சை கொடி காட்டியுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC), இதற்காகச் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான முதற்கட்ட ஒப்புதலை (AoN) வழங்கியுள்ளது.
அம்சங்கள்
இந்த முடிவின் முக்கிய அம்சங்கள்
முடிவின்படி, இதில் 120 குறுகிய தூர ஏவுகணைகளும், 168 நீண்ட தூர ஏவுகணைகளும் அடங்கும். இவை 'துரித கால நடைமுறை' மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளன. 2025-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, S-400 அமைப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை இந்தியா வெற்றிகரமாக வீழ்த்தியது. அப்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளை ஈடுகட்டவும், கையிருப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. S-400 மற்றும் பான்ட்ஸிர் ஏவுகணை அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம், எல்லை தாண்டி வரும் எந்தவொரு வான்வழி அச்சுறுத்தலையும் முறியடிக்கும் பலத்தை இந்திய விமானப்படை பெறும்.
பாதுகாப்புத் திட்டம்
பிரம்மாண்ட பாதுகாப்புத் திட்டம்
விமானப்படைக்காக ரஃபேல் (Rafale) போர் விமானங்கள் மற்றும் பல்நோக்கு போர் விமானங்களை (MRFA) வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்று பிரிவுகளுக்கும் சேர்த்துச் சுமார் ரூ.3.60 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு கொள்முதல் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டி பகுதிகளில் உள்ள ரேடார் தளங்களை இந்தியா குறிவைத்த பிறகு, S-400 அமைப்பின் மீதான அச்சம் எதிரி நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இந்த புதிய ஏவுகணைகளின் வருகை இந்தியாவின் வான்வழி ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும்.