டெல்லி: செய்தி

அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ்: அடுத்த 4 நாட்களுக்கு டெல்லியில் சுட்டெரிக்க இருக்கும் வெயில்

இன்று டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு 

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று 6 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்தனர்.

ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல்

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரிடம் வியாழக்கிழமை காவல்துறையினர் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

22 May 2024

உள்துறை

உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி போலீசார் இன்று தெரிவித்தனர்.

மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

21 May 2024

ஆப்பிள்

ஆப்பிள் விஷன் ப்ரோவைப் பயன்படுத்தி செய்த டெல்லி மருத்துவர்

ஒரு முன்னோடி மருத்துவ நடைமுறையில், புது டெல்லியில் உள்ள பிரிஸ்டின் கேரைச் சேர்ந்த டாக்டர். மோஹித் பண்டாரி என்பவர், ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற கலப்பு ரியாலிட்டி ஹெட்செட்டைப் பயன்படுத்தி நேரடி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம் 

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 May 2024

இந்தியா

டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம் 

வட இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், தேசிய தலைநகரின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 47.4 டிகிரி செல்சியஸை எட்டியது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு 

தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்க இயக்குனரகம் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தது.

இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர்க்க வேண்டிய சாலைகளை அறிவித்தது டெல்லி போக்குவரத்து காவல்துறை 

இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சில சாலைகளில் வாகனங்கள் இயக்கம் பாதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்து காவல்துறை இன்று பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

19 May 2024

பாஜக

ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்க பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆபரேஷன் ஜாது என்பதை தொடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

'நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்': இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி

இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பின் அடையாளமாக நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க இருப்பதாகவும், தான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று தெரிவித்தார்.

'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 

தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் "ஜெயில் பரோ" போராட்டத்தை அறிவித்துள்ளார்.

சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில், ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) புதிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது வழக்கு பதிவு

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வியாழக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

16 May 2024

கனமழை

வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

 "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து: மூச்சுத் திணறி ஒருவர் பலி 

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழந்தார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு 

டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கியது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதாவின் நீதிமன்ற காவலை மே 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

 'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை 

டெல்லி மதுக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அமலாக்க இயக்குநரகம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது.

14 May 2024

விமானம்

200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது 

110 நாட்களாக 200 விமானங்களில் பயணித்து பல்வேறு பயணிகளின் கைப்பைகளில் இருந்து நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிய 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு படைகள் குவிப்பு 

டெல்லியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

12 May 2024

இந்தியா

இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள் 

ஆம் ஆத்மி கட்சிக்காக(ஏஏபி) இன்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 10 உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் .

'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 

மதுக்கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் பெற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று ஹனுமான் கோயிலுக்குச் சென்று டெல்லியில் இரண்டு மெகா பேரணிகளை நடத்த உள்ளார்.

குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

06 May 2024

நொய்டா

வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல் 

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் BMW காரில் வந்த நான்கு பேர் பல கிலோமீட்டர் தூரம் வரை காரைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார்

டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்(டிபிசிசி) முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களில் பாரதிய ஜனதா கட்சியில்(பாஜக) சேர்ந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்: டெல்லி கவர்னர் உத்தரவு 

அனுமதியின்றி நியமிக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் லெப்டினன்ட் கவர்னரால் நீக்கப்பட்டனர்.

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்

இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.

80 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தேர்வுகள் நிறுத்தி வைப்பு

டெல்லியில் செயல்பட்டு வரும் கிட்டத்தட்ட 80 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

'அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டது ஏன்?' EDயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் தொடர்பான கேள்விகளுக்கு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பதிலளிக்குமாறு அமலாக்க இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம் 

கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதற்காகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிகளை(எம்சிசி) மீறியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

29 Apr 2024

அமித்ஷா

இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக பரவிய அமித் ஷாவின் வீடியோ: காவல்துறை வழக்கு பதிவு 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வைரல் போலி வீடியோ தொடர்பான புகாரில் டெல்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று ராஜினாமா செய்தார்.

'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்

அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே மெசஜை படிக்கவும், அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்க்ரிப்ஷனை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் தளம் மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் WhatsApp தெரிவித்துள்ளது.

சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது

நீரிழிவு நோயாளியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஆக உயர்ந்ததையடுத்து, திகார் சிறையில் இன்சுலின் கொடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக கூறி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா சிபிஐயால் கைது 

மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஏற்கனவே அமலாக்க இயக்குநராகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, அதே வழக்கில் தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

11 Apr 2024

இந்தியா

நேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தீர்ப்பு வழங்கும் ஆணையம், விரிவான விசாரணைகளுக்குப் பிறகு, அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (AJL) மற்றும் யங் இந்தியா(YI) சம்பந்தப்பட்ட உயர் பணமோசடி வழக்கு தொடர்பாக ரூ.751.9 கோடி சொத்துக்களை தற்காலிக இணைப்பு செய்ததை உறுதி செய்துள்ளது.

டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமாரை விஜிலென்ஸ் இயக்குனரகம் பணிநீக்கம் செய்துள்ளது.

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா 

டெல்லி அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தனது பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி(ஆம் ஆத்மி) இரண்டிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அதை இன்று உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதால், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு 

மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி: அவரது கைது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அறிவிப்பு 

மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தன்னை அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.

தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது 

திரிணாமுல் காங்கிரஸின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தேர்தல் ஆணையத்தின் டெல்லி தலைமையகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டது. அதனை தொடர்ந்து போலீஸார் அந்த 10 பேரையும் கைது செய்தனர்.

08 Apr 2024

நொய்டா

தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் 

டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது?

திஹார் சிறையில் முதல் இரவைக் கழித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்று காலை பிரட் மற்றும் டீ காலை உணவாக வழங்கப்பட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 15-நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

"உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி

எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி காட்சிகளை இன்று கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, தன் மீதான தாக்குதல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தாது என்றும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும், ஊழலில் ஈடுபடுவோர் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

தேர்தலுக்கு முன்னதாக இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இண்டியா) கட்சிகள் தங்களது ஐந்து கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் முன் வைத்துள்ளனர்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள் 

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது ஆறு தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக இன்று பெரும் பேரணியை நடத்த இருக்கும் 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று டெல்லியில் 'லோக்தந்திர பச்சாவ்' பேரணியை நடத்த உள்ளனர்.

நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் 

நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

மதுபானக் கொள்கை வழக்கில் மற்றொரு டெல்லி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன் 

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டை விசாரணைக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) அழைத்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐநா சபை 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நடைபெறும் போராட்டத்தையொட்டி, மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

டெல்லியில் உள்ள ரூஸ் வருவாய் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ED காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

"ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

வியாழக்கிழமை, டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் நோக்கம், ஆம் ஆத்மி கட்சியை நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன்

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்க, உடனே மூத்த அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியது.

முந்தைய
அடுத்தது