லஷ்கர்-இ-தொய்பா: செய்தி

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தீவிரவாதியும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியுமான அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் உயிரிழந்தார்

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்தவரும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் மாரடைப்பால் மரணமடைந்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில், டாக்டர் மற்றும் 6 பொதுமக்களை கொன்றதற்கு பொறுப்பேற்று கொண்ட தீவிரவாத அமைப்பு

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான எதிர்ப்பு முன்னணி (The Resistance Front - TRF) ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மருத்துவர் மற்றும் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டா விடுவிப்பு

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டாவை, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தடா (பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி

ஹபீஸ் சயீத்துக்கு அடுத்த தலைவராக இருந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவன உறுப்பினர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டது உறுதி என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) தெரிவித்துள்ளது.

26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

மும்பை மீதான 2008 தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களுக்காக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவனர் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம், இந்தியா கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை 

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப், பாகிஸ்தானின் சியால்கோட்டில் வைத்து இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.