லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி
செய்தி முன்னோட்டம்
ஹபீஸ் சயீத்துக்கு அடுத்த தலைவராக இருந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவன உறுப்பினர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டது உறுதி என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) தெரிவித்துள்ளது.
2008இல் நடந்த 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் ஆவார். அவர் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவராக இருந்த போது புத்தாவி துணை தலைவராக இருந்தார்.
இந்நிலையில், புத்தாவி மே 2023இல் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று UNSC கூறியுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா நடத்திய 26/11 மும்பை தாக்குதல்கள் நான்கு நாட்கள் நடந்தன. அதில் 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர்.
இந்தியா மீது தாக்குதல் நடத்தியதற்காக ஹபீஸ் சயீத்தை ஐ.நா தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி என்று அறிவித்தது.
சிக்ஸ்
மாரடைப்பால் உயிரிழந்த ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி
மேலும், ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு சமீபத்தில் பாகிஸ்தானிடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி(77), பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது இறந்ததாக ஐநா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.
"புத்தாவி, 2023 மே 29அன்று பஞ்சாப் மாகாணத்தின் முரிட்கேயில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் பாகிஸ்தான் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது இது நடந்தது" என்று UNSC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஹபீஸ் சயீத் சிறையி வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பாவின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு புத்தாவிக்கு கிடைத்தது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத், தற்போது, பாகிஸ்தானில் 78 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.