Page Loader
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு
சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2025
02:31 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை கிளை பொறுப்பு ஏற்றுள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் பஹல்காம் பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் தயார் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், சந்தேகப்படுபவர்கள்: - ஆசிப் பவுஜி, சுலைமான் ஷா, அபு தல்ஹா மேலும், ஒரு நபரின் விவரம் இன்னும் உறுதியாகாத நிலையில் உள்ளது.

வெளிநாட்டவர்

பாகிஸ்தானை சேர்ந்தவரும் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகம்

புகைப்படங்களில் உள்ள நான்கு பேரில் இருவரது தோற்றம் வெளிநாட்டவர் எனக்கூறும் வகையில் இருப்பதால், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளை கண்டறிந்து பிடிக்க உள்ளூர் போலீசும், ராணுவமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாதுகாப்பு அமைப்புகள், வெளியிடப்பட்ட புகைப்படங்களை பொது மக்களுடன் பகிர்ந்து கொண்டு தகவல்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.