சொகுசு கார்கள்: செய்தி

2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் BMW மற்றும் மினி கார்கள்

2024-ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நான்கு புதிய கார்களை வெளியிடும் திட்டத்தைக் கொண்டிருக்கின்றன சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூவும், மினியும்.

புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடானை உருவாக்கி வரும் மெர்சிடீஸ் பென்ஸ்

புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடான் ஒன்றை உருவாக்கி வருகிறது ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ்.

தங்களுடைய அடுத்த ஃப்ளாக்ஷிப்புக்கும் V12 இன்ஜினையே பயன்படுத்தவிருக்கும் ஃபெராரி

சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய 812 சூப்பர்பாஸ்ட் கூப் கார் மாடலின் மேம்பட்ட வடிவமாக புதிய கார் ஒன்றை 2024-ல் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஃபெராரி (Ferrari).

புதிய 'ரிவோல்டோ' மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அறிமுகப்படுத்திய லம்போர்கினி

தங்களுடைய ரிவோல்டோ கார் மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆர்ட் பேஸல் மியாமி பீச் 2023 நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது லம்போர்கினி.

விரைவில் கல்லினன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தவிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ்

தங்களுடைய சிறந்த சொகுசு கார் மாடல்களுள் ஒன்றான கல்லினன் (Cullinan) மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ரோல்ஸ் ராய்ஸ். இந்நிலையில், இந்த ஃபேஸ்லிப்ட் வெர்ஷனானது சோதனை ஓட்டத்தின் போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது.

27 Nov 2023

ஆடி

2024 ஜனவரி முதல் இந்தியாவில் தங்களது கார்களின் விலையை உயர்த்தும் ஆடி

2024 ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் அனைத்து மாடல் கார்களின் விலையையும் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி.

27 Nov 2023

லியோ

லியோ திரைப்படத்தின் மூலம் ஆண்டனி தாசாக அறிமுகமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கார் கலெக்ஷன்

கேஜிஎஃப் படத்தில் பார்ட் டைம் வில்லனாக அதிரடி காட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜின் லியோ படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகமானார். கார் மோகம் மிகுந்த இந்திய பிரபலங்களில் சஞ்சய் தத்தும் ஒருவர்.

இந்தியாவில் வெளியாகும் லோட்டஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார், எமைரா!

தங்களுடைய எலெட்ரே (Eletre) எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் அறிமுகத்துடன் இந்தியாவில் இந்த மாதத் தொடக்கத்தில் கால் பதித்திருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான லோட்டஸ் (Lotus).

26 Nov 2023

போர்ஷே

ரூ.1.68 கோடி விலையில் இந்தியாவில் வெளியான அப்டேட் செய்யப்பட்ட போர்ஷே பனமேரா

தங்களுடைய மேம்படுத்தப்பட்ட 'மூன்றாம் தலைமுறை பனமேரா' (Panamera) ஸ்போர்ட் செடான் மாடலின் உலகளாவிய வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் அதனை வெளியிட்டிருக்கிறது போர்ஷே.

அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் நுழையும் 'லோட்டஸ்'

வரும் நவம்பர் 9ம் தேதியன்று புதிய சொகுசு காரின் அறிமுகத்துடன் அதிகாரப்பூர்வமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழையவிருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ் (Lotus).

இந்தியாவில் வெளியானது புதிய 'BMW X4 M40i' எஸ்யூவி

சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் 'X4 M40i' சொகுசு கார் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்தப் புதிய எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவானது பிஎம்டபிள்யூவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டிருக்கிறது.

புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ் 

புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். உலகளவில் மிகவும் பிரபலமான E-கிளாஸ் செடானில், உட்பக்கம் நல்ல இடவசதியுடன் கூடிய மாடலாக இந்த லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

ரூ.2.5 கோடி விலையில் வெளியானது 'BMW i7 M70 எக்ஸ்டிரைவ்' எலெக்ட்ரிக் கார்

உலகளவில் தாங்கள் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகவும் பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் கார் மாடலான 'i7 M70 எக்ஸ்டிரைவ்' மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.

ரூ.1.81 கோடி விலையில் இந்தியாவில் வெளியானது 'BMW 740d M ஸ்போர்ட்' செடான்

இந்தியாவில் தங்களது புதிய '7 சீரிஸ் 740d M ஸ்போர்ட்' லக்சரி செடான் மாடலை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த மாடலை CBU (Completely Built Unit) முறையில் இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் வெளியானது புதிய மினி 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' சொகுசு கார்

இந்தியாவில் புதிய 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' மாடல் சொகுசு காரை வெளியிட்டிருக்கிறது மினி. 'கன்ட்ரிமேன் கூப்பர் S JCW' மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த மாடலை வடிவமைத்திருக்கிறது மினி.

ரூ.4.59 கோடி விலையில் இந்தியாவில் வெளியானது ஆஸ்டன் மார்டின் DB12 சொகுசு கார்

இந்தியாவில் தங்களுடைய விலைமதிப்புமிக்க 'DB12' சூப்பர் டூரர் மாடலை வெளியிட்டிருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்டின். நான்கு மாதங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் இந்தக் காரை அந்நிறுவனம் வெளியிட்டது.

இந்தியாவில் வெளியானது புதிய மெர்சிடீஸ் AMG G 63 கிராண்டு எடிஷன் 

இந்தியாவில் தாங்கள் ஏற்கனவே விற்பனை செய்து வரும் AMG G 63 மாடலின் கிராண்டு எடிஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். மொத்தமாக 1000 AMG G 63 கிராண்டு எடிஷன் கார்களையே தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் புதிய EQE 500 எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டது மெர்சிடீஸ்

இந்தியாவில் தங்களுடைய மூன்றாவது எலெக்ட்ரிக் மாடலாக EQE 500 எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம். ஏற்கனவே, EQS செடான் மற்ரும் EQB எஸ்யூவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் வெளியானது புதிய 'BMW 6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர்' 

இந்தியாவில் விற்பனையாகி வரும் 6 சீரிஸ் கிராண்டு டுரிஸ்மோவின் புதிய வேரியன்ட் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடனும், சில புதிய வசதிகளுடனும் வெளியாகியிருக்கிறது '6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர்'.

03 Sep 2023

எஸ்யூவி

இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது பிற கார் மாடல்களை விட எஸ்யூவிக்குத் தான் எதிர்பார்ப்பும் தேவையும் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் எஸ்யூவிக்களையே வாடிக்கையாளர்கள் அதிகமாகவும் விரும்புகிறார்கள்.

புதிய 'நியூ கிளாஸ்' எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியிருக்கும் BMW

தங்களுடைய எதிர்கால எலெக்ட்ரிக் கார்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் வகையில், முன்னோட்டமாக விஷன் நியூ கிளாஸ் (Vision Neue Klasse) கான்செப்ட் எலெக்ட்ரிக் காரை தற்போது நடைபெற்று வரும் மியூனிச் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ.

25 Aug 2023

போர்ஷே

இந்தியாவில் தங்களுடைய விலையுயர்ந்த கார் மாடலை வெளியிட்டிருக்கும் போர்ஷே

இந்தியாவில் தங்களுடைய புதிய '911 S/T' ஸ்போர்ட்கார் மாடலை வெளியிட்டிருக்கிறது போர்ஷே.

அடுத்த மாதம் வெளியாகிறது சொகுசுக் கார் மாடலான 'ஆஸ்ட்ன் மார்டின் DB12'

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஆஸ்டன் மார்டின், தங்களுடைய விலையுயர்ந்த காரான DB11-ஐ இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. தற்போது அதற்கு மாற்றான, அப்டேட் செய்யப்பட்ட DB12 மாடலை அடுத்த மாதம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ் பென்ஸ் இரண்டாம் தலைமுறை GLC 

இந்தியாவில் தங்களது இரண்டாம் தலைமுறை GLC மாடலை, இரண்டு வேரியன்ட்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஒரு வேரியன்டையும், டீசல் இன்ஜின் கொண்ட ஒரு வேரியன்டையும் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்.

'Legend' சரவணனின் கார் கலெக்ஷனைப் பற்றித் தெரியுமா?

தமிழகத்தின் மிகவும் பிரபலமான ஜவுளி நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் 'Legend' சரவணனைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வருடம் 'லெஜண்ட்' என்ற தமிழ்த் திரைப்படம் ஒன்றிலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட்

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது லேண்டு ரோவர். கடந்த வாரம் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், செப்டம்பரில் இதன் டெலிவரியைத் தொடங்கவிருக்கிறது லேண்டு ரோவர்.

இந்தியாவில் ரேஞ்சு ரோவர் வேலாரின் முன்பதிவை தொடங்கியது லேண்டு ரோவர்

2018 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரேஞ்சு ரோவர் வேலாரின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கியிருக்கிறது லேண்டு ரோவர். இந்த புதிய ஃபேஸ்லிப்டின் மாடலின் டெலிவரி செப்டம்பரில் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறது லேண்டு ரோவர்.

ஆகஸ்ட்-9ல் வெளியாகவிருக்கும் இரண்டாம் தலைமுறை GLC எஸ்யூவியின் முன்பதிவை தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ் 

இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய GLC எஸ்யூவியின் அப்டேட் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலை வரும் ஆகஸ்ட் 9-ல் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ்.

17 Jul 2023

போர்ஷே

இந்தியாவில் 'கேயன்' மற்றும் 'கேயன் கூப்' மாடல்களை வெளியிட்டது போர்ஷே

இந்தியாவில் 2018-ல் தங்களுடைய 'கேயன்' மாடல் காரையும், 2019-ல் தங்களுடைய 'கேயன் கூப்' மாடலையும் வெளியிட்டது ஜெர்மனியைச் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே.

இந்தியாவில் வெளியானது BMW X5 ஃபேஸ்லிப்ட் மாடல்

இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களது X5 மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நான்காம் தலைமுறை X5 மாடலானது 2019-ல் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸின் புதிய AMG SL 55 ரோட்ஸ்டர்

புதிய 'AMG SL 55' மாடல் ரோட்ஸ்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ் நிறுவனம். 2+2 சீட்டிங் கான்ஃபிகரேஷன் மற்றும் ஃபேப்ரிக் ரூஃபுடன் இந்தியாவில் வெளியிகியிருக்கிறது இந்த புதிய ரோட்ஸ்டர்.

புதிய C40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது வால்வோ

தங்களது புதிய எலெக்ட்ரிக் காரான 'C40 ரீசார்ஜ்' மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது வால்வோ. 2022, ஜூலையில் வெளியான 'XC40 ரீசார்ஜூ'க்கு அடுத்தபடியாக, இந்தியாவில் வால்வோ வெளியிடும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இது.

ரூ.98 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது BMW M2

இரண்டாம் தலைமுறை M2 மாடல் 2 டோர் ஸ்போர்ட்ஸ் கூப் காரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.

'ப்ளாக் பேட்ஜ் கல்லினன் ப்ளூ ஷேடோ' மாடலை அறிமுகப்படுத்தியது ரோல்ஸ் ராய்ஸ்!

புதிய 'ப்ளாக் பேட்ஜ் கல்லினன் ப்ளூ ஷேடோ' மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இந்த மாடலில் மொத்தம் 62 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படவிருக்கும் நிலையில், அத்தனை கார்களுமே ஏற்கனவைே வாங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வெளியானது '2024 லெக்சஸ் LC 500h' லக்சரி மாடல் கார்!

தங்களுடைய புதிய 2024 LC 500h மாடல் சொகுசு காரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ். ஒன்பது பெயின்ட் ஸ்கீம்கள், மூன்று இன்டீரியர் ட்ரிம் ஆப்ஷன்களுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே வேரியன்ட்டாக இந்த அப்டேட் செய்யப்பட்ட LC 500h-ஐ வழங்குகிறது லெக்சஸ்.

X1 லைன்-அப்பில் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது BMW

X1 மாடலின் 'sDrive 18i M Sport' வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது பிஎம்டபிள்யூ.

26 Apr 2023

செடான்

6ம் தலைமுறை E-கிளாஸ் மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்! 

சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படவிருக்கும் ஆறாம் தலைமுறை E-கிளாஸ் செடான் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடீஸ் பென்ஸ்.

13 Apr 2023

கார்

இந்தியாவில் வெளியானது லம்போர்கினியின் புதிய 'உரூஸ் S' 

கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையில் இருந்து உரூஸ் மாடலுக்கு மாற்றாக உரூஸ் S மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது லம்போர்கினி. சொகுசு கார்கள் என்று பரவலாக அறியப்படும் பிராண்டின் மாடலை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது.

ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன? 

ஆடி காரில் வந்து ஒரு இளைஞர் டீ விற்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் செய்தியாகி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.

மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது AMG S 63 E மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.

விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்?

பிரபல மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் இந்தியாவில் விலை உயர்ந்த மெர்சிடிஸ் Maybach GLS 600 சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்!

பல பிரபலங்கள் ஆடம்பர கார்களை வாங்கி குவிக்கும் நிலையில், ஹாலிவுட் திரைப்படம், இந்தி சீரியல்களின் நடித்த குழந்தை நட்சத்திரமான ரிவா அரோரா என்ற குழந்தை விலையுர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார்.

24 Feb 2023

கார்

விலை உயர்ந்த Mercedes-AMG G 63 பென்ஸ் கார் - தனி சிறப்பு அம்சங்கள் என்ன?

ஜெர்மன் ஆட்டோமோட்டிவ் நிறுவனமான Mercedes-AMG இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் SUV மாடலான G 63 இன் விலைமட்டுமே ரூ. 75 லட்சம், அதிகரித்துள்ளது எனவும், விலை ரூ. 3.3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) எனவும் கூறப்படுகிறது.

14 Feb 2023

கார்

20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல்

இந்தியாவில் 20 லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் SUV கார்களின் முக்கியான 5 கார்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

லம்போர்கினி மூலம் கொண்டு செல்லப்பட்ட சிறுநீரகம்

கார்

மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார்

நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு, இரண்டு சிறுநீரகங்களை, மாற்றியமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரைப் பயன்படுத்தி கொண்டு சென்றுள்ளனர், இத்தாலிய போலீசார்.

மெக்லாரனின் 765 LT ஸ்பைடர்

கார் கலக்ஷன்

இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்

இந்தியாவின் மிக விலையுர்ந்த காராக கருதப்படும் மெக்லாரனின் 765 LT ஸ்பைடரை வாங்கிய முதல் நபர், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் நசீர் கான் ஆவார்.