ரூ.98 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது BMW M2
இரண்டாம் தலைமுறை M2 மாடல் 2 டோர் ஸ்போர்ட்ஸ் கூப் காரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ஸ்டாண்டர்டாகக் கொண்ட ஒரே ஒரு வேரியன்ட்டை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. CBU (Completely built Unit) முறையில், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்த மாடலை இந்தியாவில் விற்பனை செ்யவிருக்கிறது அந்நிறுவனம். ஸ்டாண்டர்டான ஆப்ஷனைத் தவிர்த்து மேனுவல் கியர்பாக்ஸ், கார்பன்-ஃபைபர் ரூஃப் மற்றும் M டிரைவர் பேக்கேஜ் உள்ளிட்ட கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிரது பிஎம்டபிள்யூ. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான வசதிகளை மட்டும் மாற்றி கஸ்டமைஸ் செய்து கூடுதல் விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இந்தியாவில் போர்ஷே 718 கேமன்னுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது புதிய பிஎம்டபிள்யூ M2.
இன்ஜின் மற்றும் விலை:
பிஎம்டபிள்யூ M3 மற்றும் M4 மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள, 460hp பவர் மற்றும் 550Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 3.0 லிட்டர் இன்ஜினையே இந்த M2-விலும் பயன்படுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ. ஸ்டாண்டர்டான 8-ஸ்பீடு டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன், 100 கிமீ வேகத்தை 4.1 நொடிகளில் எட்டிப் பிடிக்கும் புதிய M2-வின் டாப் ஸ்பீடு 250 கிமீ. மேலும், இந்த M2-வில் அடாப்டிவ் M சஸ்பென்ஷனை ஸ்டாண்டர்டாகவே கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது புதிய M2. இந்தியாவில் ரூ.98 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த புதிய பிஎம்டபிள்யூ M2.