NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை  12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்
    மெக்லாரன் 765 LT ஸ்பைடர்

    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 17, 2022
    11:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிக விலையுர்ந்த காராக கருதப்படும் மெக்லாரனின் 765 LT ஸ்பைடரை வாங்கிய முதல் நபர், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் நசீர் கான் ஆவார்.

    இந்த காரின் விலை விலை சுமார் Rs.12 கோடி என அறியப்படுகிறது.

    இந்தியா மார்க்கெட்டில், இவ்வகை கார்கள் வெறும் 765 மட்டுமே புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது எனவும், முதல் கார்-ஐ, நசீர் கான் வாங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    நசீர் கான் மேலும் பல விலைமதிப்பான, பிரத்தியேகமான சூப்பர் கார்களை தனது கலெக்ஷனில் வைத்திருக்கிறார்.

    ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ், ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி, ஃபோர்டு முஸ்டாங், லம்போர்கினி அவென்டடோர், லம்போர்கினி யூரஸ் என்ற வரிசையில் இப்போது மெக்லாரன் 765LT ஸ்பைடரும் இணைந்துள்ளது.

    மேலும் தெரிந்துகொள்ள

    மெக்லாரனின் 765 LT ஸ்பைடர்

    மெக்லாரன் 765 LT ஸ்பைடர் மாடல் 4.0-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V8 பெட்ரோல் எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது.

    அதிகபட்சமாக 765 Ps பவர் அவுட்புட் மற்றும் 760 Nm உச்ச முறுக்குவிசையை தருகிறது. இன்று வரை, மெக்லாரனால் தயாரிக்கப்பட்ட அதிவேக கன்வெர்ட்டிபிள்களில் ஒன்றாகவும், ஏரோடைனமிக் வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சூப்பர்கார், 2.7 வினாடிகளில் 60km/hr வேகத்தை எட்ட முடியும் எனவும், அதிகபட்சமாக 205 மைல் வேகத்தில் செல்ல முடியும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

    இந்த காரின் மேற்க்கூரை வெறும் 11 வினாடிகளில் விரிக்க முடியும் என்பது மேலும் ஒரு ஆச்சரியமான தகவல்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார் கலக்ஷன்

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    கார் கலக்ஷன்

    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025