Page Loader
ரூ.2.5 கோடி விலையில் வெளியானது 'BMW i7 M70 எக்ஸ்டிரைவ்' எலெக்ட்ரிக் கார்
இந்தியாவில் வெளியானது 'BMW i7 M70 எக்ஸ்டிரைவ்' எலெக்ட்ரிக் கார்

ரூ.2.5 கோடி விலையில் வெளியானது 'BMW i7 M70 எக்ஸ்டிரைவ்' எலெக்ட்ரிக் கார்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 19, 2023
03:31 pm

செய்தி முன்னோட்டம்

உலகளவில் தாங்கள் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகவும் பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் கார் மாடலான 'i7 M70 எக்ஸ்டிரைவ்' மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்தியாவில் மெர்சிடீஸ் AMG EQS மாடலுடன் போட்டியிடவிருக்கிறது இந்த M70 எக்ஸ்டிரைவ். இந்தியாவில் தங்களுடைய எலெக்ட்ரிக் வாகன லைன்-அப்பை மேம்படுத்தும் பிஎம்டபிள்யூவின் அடுத்த படி இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த i7 M70 எக்ஸ்டிரைவ் மாடலையும் CBU முறையிலேயே இந்தியாவில் விற்பனை செய்யவிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த மாடலையும் இன்று முதல் இந்தியாவில் உள்ள பிஎம்டபிள்யூ ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ i7 M70 எக்ஸ்டிரைவ்: எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் விலை 

இந்தப் புதிய i7 எலெக்ட்ரிக் கார் மாடலில் 660hp பவர் மற்றும் 1,100Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய ரியர் ஆக்ஸில் மோட்டாரைக் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லம் திறனைக் கொண்டிருக்கும் இந்த i7 M70 எக்ஸ்டிரைவானது, 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது. இந்த i7 எலெக்ட்ரிக் கார் மாடலில் 101.7kWh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரியானது 560 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த மாடலுடன் வீட்டில் பொருத்திக் கொள்ளும் வகையிலான 22kW வால்பாக்ஸ் சார்ஜரையும் வழங்குகிறது பிஎம்டபிள்யூ. இந்தியாவில் இந்த i7 M70 எக்ஸ்டிரைவ் மாடலை ரூ.2.5 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.