மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை உயர்வு: ஏப்ரல் முதல் அமல்!
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் 2 சதவீதம் வரை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது. சொகுசு கார்களை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு முக்கியச் செய்தியாகும். ஏற்கனவே ஆடி நிறுவனம் விலை உயர்வை அறிவித்திருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது மெர்சிடீஸ் பென்ஸும் அறிவித்துள்ளது.
மெர்சிடீஸ்
விலை உயர்வுக்கான காரணங்கள்:
உற்பத்திச் செலவு அதிகரிப்பு: உதிரி பாகங்களின் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நாணய மதிப்பு மாற்றம்: சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் செலவினங்களைச் சமாளிக்க இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார். தளவாடச் செலவுகள் (Logistics): போக்குவரத்து மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளதும் ஒரு முக்கியக் காரணியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.