Loading...
திலீப்பிற்கு பதிலாக புதிய பயிற்சியாளர்! இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் கோச்சாக சுபதீப் கோஷ் நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் கோச்சாக சுபதீப் கோஷ் நியமனம்

திலீப்பிற்கு பதிலாக புதிய பயிற்சியாளர்! இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் கோச்சாக சுபதீப் கோஷ் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2026
11:27 am

செய்தி முன்னோட்டம்

ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக விளையாடியுள்ள முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக மிகச் சிறப்பாகப் பணியாற்றி வந்த டி.திலீப்பின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக சுபதீப் கோஷ் இந்த புதிய பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சிக் குழுவில் இணைந்து செயல்பட உள்ளார்.

முதல் பணி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் பணி

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்தான் சுபதீப் கோஷ் இந்திய அணிக்காகப் பணியாற்றவுள்ள முதல் தொடராகும்.

57 வயதான சுபதீப் கோஷ், கடந்த 1994 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக 17 முதல்தரப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவராவார்.

அத்துடன் அசாம் மாநில மூத்த ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் திறம்படச் செயல்பட்டுள்ளார்.

தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்கும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்னே மோர்கலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரம்

அனுபவமிக்க பயிற்சியாளருக்குக் கிடைத்த அங்கீகாரம்

இதற்கு முன்பாகச் சுபதீப் கோஷ் தேசியக் கிரிக்கெட் அகாடமி, இந்திய ஏ அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

சுபதீப் கோஷின் இந்த நியமனம் குறித்துப் பெருமிதம் தெரிவித்துள்ள அசாம் கிரிக்கெட் சங்கம், "பல்வேறு வயது பிரிவினருக்கான இந்திய அணிகளுடன் இணைந்து பணியாற்றித் தனது திறமையை நிரூபித்த அவருக்கு இந்த உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது அசாம் மாநில கிரிக்கெட் சமூகத்திற்கு மிகப்பெரிய பெருமையாகும்." என்று தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் பாராட்டியுள்ளது.

ADVERTISEMENT