Loading...
ஏற்றமா இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஏற்றமா இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2026
10:40 am

செய்தி முன்னோட்டம்

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (செப்டம்பர் 17), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹55 குறைந்து ₹14,010 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹440 குறைந்து ₹1,12,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹60 குறைந்து ₹15,284 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹480 குறைந்து ₹1,22,272 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹54 குறைந்து ₹11,780 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 குறைந்து ₹94,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹250 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,50,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT