LOADING...
ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு ரூ. 25,000 வரை சலுகைகள் அறிவிப்பு
ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்

ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு ரூ. 25,000 வரை சலுகைகள் அறிவிப்பு

எழுதியவர் Prasanna
Mar 14, 2026
09:22 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், தங்களது விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் ரிவோல்ட் நிறுவனம் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதன் பிரபலமான RV400 மற்றும் RV400 BRZ ஆகிய மாடல்களுக்கு இந்தச் சலுகைகள் பொருந்தும். குறிப்பிட்ட மாடல்களின் மீது நேரடி பணத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்கள் பழைய பெட்ரோல் பைக்கை கொடுத்துவிட்டு புதிய ரிவோல்ட் பைக்கை வாங்கும்போது கூடுதல் போனஸ் தொகை கிடைக்கிறது. பேட்டரி மற்றும் மோட்டார்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி (Extended Warranty) சலுகைகளும் இதில் அடங்கும்.

ரிவோல்ட்

ஏன் இந்த சலுகைகள்?

ஒட்டுமொத்தமாக ஒரு வாடிக்கையாளர் இவற்றின் மூலமாக அதிகபட்சமாக ரூ. 25,000 வரை பலன்களைப் பெற முடியும். தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து வரும் சூழலில், மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என நிறுவனம் கருதுகிறது. மேலும், சந்தையில் உள்ள பிற மின்சார பைக் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இந்த அதிரடி சலுகைகளை ரிவோல்ட் வழங்குகிறது. இந்த சலுகைகள் மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என ரிவோல்ட் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement