LOADING...
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹1,120 சரிவு; இன்றைய விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 சரிவு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹1,120 சரிவு; இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
10:12 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை (மார்ச் 14) குறைந்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹140 குறைந்து ₹14,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,120 குறைந்து ₹1,18,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹154 குறைந்து ₹16,102 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,232 குறைந்து ₹128,816 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹150 குறைந்து ₹12,400 ஆகவும், ஒரு சவரன் ₹1,200 குறைந்து ₹99,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே, சனிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹280.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement