NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய 'ரிவோல்டோ' மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அறிமுகப்படுத்திய லம்போர்கினி
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய 'ரிவோல்டோ' மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அறிமுகப்படுத்திய லம்போர்கினி
    புதிய 'ரிவோல்டோ' மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அறிமுகப்படுத்திய லம்போர்கின

    புதிய 'ரிவோல்டோ' மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அறிமுகப்படுத்திய லம்போர்கினி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 08, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்களுடைய ரிவோல்டோ கார் மாடலின் 'ஒபேரா யுனிகா' வெர்ஷனை அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆர்ட் பேஸல் மியாமி பீச் 2023 நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது லம்போர்கினி.

    தங்களுடைய 60வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ரிவோல்டோ ஒபேரா யுனிகா வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது லம்போர்கினி.

    கையாலேயே வரையப்பட்ட, பல்வேறு நிறங்களைக் கொண்டிருப்பது போலத் தோற்றமளிக்கும் இந்த ஒபேரா யுனிகா வெர்ஷனில் ஒரே ஒரு மாடலை மட்டுமே உருவாக்கியிருக்கிறது அந்நிறுவனம்.

    மேலும், இதனை ஒரு ஆட்டோமொபைல் கண்கொண்டு உருவாக்காமல், ஒபேரா யுனிகாவின் வெளித்தோற்றத்தை ஒரு கலைப்படைப்பகாகக் கருதி உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    லம்போர்கினி

    லம்போர்கினி ரிவோல்டோ ஒபேரா யுனிகா: 

    இதன் வெளித்தோற்றத்திற்காக 435 மணி நேரமும், உள் அலங்காரங்களுக்காக 220 மணி நேரமும் செலவழித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது லம்போர்கின். மேலும், இதனை சோதனை செய்வதற்காக மட்டுமே 76 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    இந்த ரிவோல்டோ மாடலிலேயே உலகின் அதிக செயல்திறன் மிக்க இன்ஜின்களுள் ஒன்றான V12 ஹைபிரிட் இன்ஜினைப் பொருத்தியிருக்கிறது லம்போர்கினி. மேலும், இந்த ரிவோல்டோ மாடலானது ஒரு பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    60ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை ஒட்டி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கார் மாடலில், லம்போர்கினியின் 60ம் ஆண்டு விழா லோகோவைப் பயன்படுத்தியிருக்கிறது லம்போர்கினி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லம்போர்கினி
    சொகுசு கார்கள்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    லம்போர்கினி

    லம்போர்கினியின் புதிய ரெவால்டோ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்.. என்ன ஸ்பெஷல்?  புதிய வாகனம் அறிமுகம்

    சொகுசு கார்கள்

    விலை உயர்ந்த Mercedes-AMG G 63 பென்ஸ் கார் - தனி சிறப்பு அம்சங்கள் என்ன? கார்
    13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்! கார் உரிமையாளர்கள்
    விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்: ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    ஆட்டோமொபைல்

    ஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி ஹோண்டா
    அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் எலக்ட்ரிக் கார்
    2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள் கார்
    இந்தியாவில் R3 மற்றும் MT-03 பைக்குகளின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருக்கிறது யமஹா யமஹா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025