கல்வி: செய்தி
#ShameOnUGC; சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! UGCயின் புதிய ஈக்விட்டி விதிகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானதா?
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ஒழுங்குமுறைகள், 2026 (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
கல்விதான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்! இன்று சர்வதேச கல்வி தினம்! வரலாற்றுப் பின்னணி
உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் (International Education Day) கொண்டாடப்படுகிறது.
படிப்பு இனி போரடிக்காது! பாடப்புத்தகங்களை மைண்ட் மேப் மற்றும் வினாடி வினாவாக மாற்றும் கூகுளின் புதிய ஏஐ அறிமுகம்
மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் 'லெர்ன் யுவர் வே' (Learn Your Way) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்: கடிதம் எழுதும் போட்டியில் வென்றால் ரூ.50,000 பரிசு, சுவிட்சர்லாந்துக்கு ட்ரிப்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒரு தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அறிவித்துள்ளது.
எழுதிப் படித்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமா? மாணவர்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் லேப்டாப் மற்றும் டேப்லெட்களில் பாடங்களை டைப் செய்வதையே விரும்புகின்றனர்.
கணக்கு இனி கஷ்டமே இல்ல! மாணவர்களுக்கு என்சிஇஆர்டியின் அதிரடி அறிவிப்பு; ஏஐ மூலம் கணிதம் கற்க சூப்பர் வாய்ப்பு
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக நான்கு நாட்கள் கொண்ட ஒரு இன்டரேக்டிவ் (Interactive) பயிற்சியை அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் படிக்க ஆசையா? அயர்லாந்து அரசின் 100% இலவச ஸ்காலர்ஷிப்; இந்திய மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
வெளிநாட்டில் உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அயர்லாந்து அரசு ஒரு பொற்கால வாய்ப்பை அறிவித்துள்ளது.
வினாடிக்கு 3.1 குவாட்ரில்லியன் கணக்கீடு! ஐஐடி மெட்ராஸில் மிரட்டும் பரம்சக்தி சூப்பர் கம்ப்யூட்டர்; இந்தியா அதிரடி
இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், சென்னை ஐஐடியில் பரம் சக்தி என்ற அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
மோடியின் 'பரீக்ஷா பே சர்ச்சா' படைத்த பிரம்மாண்ட சாதனை! 4 கோடி பதிவுகளுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது
பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் பரீக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) 2026 நிகழ்வு, உலகளாவிய அளவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) தொடங்கி வைக்கிறார்.
உலக நாடுகளை ஆளப்போகும் சென்னை ஐஐடி; IITM Global மூலம் பன்னாட்டு கல்வி நிறுவனமாக அவதாரம்
ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய கல்வி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில், ஐஐடிஎம் குளோபல் என்ற புதிய திட்டத்தை இன்று (ஜனவரி 2) தொடங்கியுள்ளது.
இந்தியா தொழிலாளர் திறன் நெருக்கடியை எதிர்கொள்கிறது, 73% பேர் மேம்பட்ட கல்வி இல்லாதவர்கள்
சமீபத்தில் முடிவடைந்த 5வது தேசிய தலைமை செயலாளர்கள் மாநாட்டில் (NCS) வழங்கப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவின் பணியாளர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கின்றனர்.
13 வயதில் ஐஐடி, 24 வயதில் பிஎச்டி: வியப்பில் ஆழ்த்திய பீகார் கிராமத்து இளைஞரின் சாதனை
பீகார் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த ஒரு இளைஞர், தனது அபாரமான புத்திசாலித்தனத்தால் ஒட்டுமொத்த இந்திய கல்வி உலகையே வியக்க வைத்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை: NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (NMMS) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களே, பெற்றோர்களே அலெர்ட்; இதையெல்லாம் தெரியாம வெளிநாட்டுக்கு படிக்க போகாதீங்க!
2026 ஆம் கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்கு அனுப்பத் திட்டமிடும் இந்தியப் பெற்றோர்களின் முன்னுரிமைகள் தற்போது மாறியுள்ளன.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலெர்ட்: செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை நடைபெறவுள்ளன.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது நாமக்கல்
தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறத் தயாராக உள்ளது.
6 முதல் 8 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்காக 40 வார ஆன்லைன் டிப்ளமோ படிப்பு: NCERT அறிமுகம்
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), நடுநிலைப் பள்ளி அளவில் (6 முதல் 8 ஆம் வகுப்பு) அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக, 40 வார கால விரிவான ஆன்லைன் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்களே அலர்ட்; மாதம் ரூ.20,000 உதவித்தொகை; ஆர்பிஐ சம்மர் இன்டர்ன்ஷிப்புக்கு உடனே விண்ணப்பிங்க
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இனி யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகள் இருக்காதா? மத்திய அரசின் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' மசோதாவின் முழு விபரம்
இந்திய உயர்கல்வித் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவற்றை மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
+2வில் 75% எடுத்த மாணவிகளுக்கு மாதம் 12,500 உதவித்தொகை; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்
கோடக் மஹிந்திரா குழுமம் மற்றும் கோடக் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவிகளுக்கு உதவும் வகையில் கோடக் கன்யா கல்வி உதவித்தொகை 2025-26 (Kotak Kanya Scholarship 2025-26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி கோடிங் படிப்பவர்களுக்கு வேலை இருக்குமா? ஏஐ நிபுணர் சொல்வதைக் கேளுங்க
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால், கோடிங் திறன் விரைவில் மதிப்பிழக்கும் என்ற கருத்து தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வருகிறது.
பணியில் இருப்பவர்களுக்காக ஏஐ தலைமையியல் ஆன்லைன் படிப்பு ஐஐடி மும்பையில் அறிமுகம்; யாரெல்லாம் சேரலாம்?
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மும்பை, அதன் ஷைலேஷ் ஜே.மேத்தா மேலாண்மைக் கல்விப் பிரிவும் (SJMSOM) கிரேட் லேர்னிங் (Great Learning) தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும் இணைந்து, நடுத்தர மற்றும் மூத்த நிலை நிர்வாகிகளுக்கான 'ஏஐ தலைமையியல்' (Leadership with AI) என்ற நான்கு மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறைக்கு டாட்டா.. 2026 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பில் பெரிய மாற்றம் செய்தது சிபிஎஸ்இ
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு இதில் தாமதம் கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
உயர்கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்துவதிலும், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதிலும் ஏற்படும் தாமதங்கள் குறித்துப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடும் கவலை தெரிவித்துள்ளது.
2026-27 கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம் பெற்ற நாடாக உருவெடுத்தது இந்தியா
டைம்ஸ் உயர் கல்வி (THE) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பல்துறை அறிவியல் தரவரிசையில் (Interdisciplinary Science Rankings - ISR) 88 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
மாணவர்களே அலெர்ட்; ஐஐடியில் இலவசமாக Deep Learning படிப்பு; எப்படி சேர்வது?
ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனம், ஸ்வயம் (SWAYAM) தளத்துடன் இணைந்து, 2026 ஜனவரியில் தொடங்கவுள்ள Deep Learning தொடர்பான இலவச ஆன்லைன் பாடப்பிரிவுக்குப் பதிவுகளைத் தொடங்கியுள்ளது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்படும்; உத்தரப்பிரதேச முதல்வர் அறிவிப்பு
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 10) அறிவித்துள்ளார்.
1981 முதல் அரியர் வைத்த மாணவர்கள் பட்டம் பெற அரிய வாய்ப்பு; சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம், அரியர் வைத்த மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களே அலெர்ட்; ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2026க்கான விண்ணப்பம் தொடக்கம்
இந்தியாவின் முதன்மையானப் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main) 2026 ஜனவரிப் பதிவிற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
பிப்ரவரி 17 முதல் பொதுத்தேர்வு; 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது சிபிஎஸ்இ
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான இறுதித் தேர்வுக் கால அட்டவணையை (Date Sheet) வெளியிட்டுள்ளது.
இனி பள்ளி பொதுத்தேர்வில் 100க்கு 30 மார்க் எடுத்தால் தேர்ச்சி; கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடக அரசு தனது தேர்வு முறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது.
9 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான கல்வி உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீத் ஸ்டார்மர் ஆகியோர் இணைந்து 9 முன்னணி பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க உள்ளதை அறிவித்துள்ளனர்.
இந்தியா- UK இடையே பாதுகாப்பு, கல்வி, முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களை அறிவித்துள்ளனர்.
இனி MS Office எல்லாம் கிடையாது; அனைத்து ஊழியர்களும் Zoho Office Suiteக்கு மாற மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
ஆத்மநிர்பர் பாரத் இலக்கை நோக்கிய முக்கிய நகர்வாக, மத்திய கல்வி அமைச்சகம் இனி அனைத்து அலுவல் ரீதியான ஆவணப் பணிகளுக்கும் Zoho Office Suite எனப்படும் மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால்... தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றல்: மத்திய அரசு திட்டம்
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றலை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டம்
இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான (NEET UG) நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
NIRF தரவரிசைப் பட்டியல் 2025: தேசிய அளவில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள தமிழக கல்லூரிகளின் பட்டியல்
மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் TET தகுதி கட்டாயம்; உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
கற்பித்தல் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவில் விரிவான கற்றல் திட்டத்திற்காக ஐஐடி மெட்ராஸுடன் கூட்டு சேர்ந்தது ஓபன்ஏஐ நிறுவனம்
சாட்ஜிபிடியை உருவாக்கிய நிறுவனமான ஓபன்ஏஐ, இந்தியக் கல்வித் துறையின் மீதான தனது அர்ப்பணிப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் உட்பட 45 பேருக்கு அறிவிப்பு
கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்புச் செய்து, மாணவர்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் ஆசிரியர்களைப் பாராட்டவும், கௌரவிக்கவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 5 அன்று வழங்கவுள்ளார்.
பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மாணவர்களே அலெர்ட்; GATE 2026 விண்ணப்பப் பதிவுக்கான தேதிகள் மாற்றம்
பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) 2026 ஐ நடத்தும் நிறுவனமான இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கௌஹாத்தி, தேர்வுக்கான பதிவு அட்டவணையை மாற்றியமைத்துள்ளது.
பாடப்புத்தகங்களில் தவறான கன்டென்ட் இருப்பதாக சர்ச்சை; ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்தது NCERT
வரலாற்றுத் தவறுகள் மற்றும் விடுபட்டவை குறித்து பரவலான கவலைகளைத் தொடர்ந்து, சமீபத்தில் திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்கள் குறித்த கருத்துக்களை மதிப்பிடுவதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஒரு குழுவை அமைத்துள்ளது.
தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை (SEP) வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2025-26 பொதுத் தேர்வுக்கு இது கட்டாயம்; சிபிஎஸ்இ கிடுக்கிப்பிடி உத்தரவு
2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குத் தகுதி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாய விதியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; நெல்லை மாணவர் சூரிய நாராயணன் முதலிடம்
தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான 2025 மாநில தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது உதவிய பஞ்சாப் சிறுவனின் முழு கல்விச் செலவையும் ஏற்றது இந்திய ராணுவம்
மே 2025 இல் ஆபரேஷன் சிந்தூர் போது விதிவிலக்கான துணிச்சலை வெளிப்படுத்திய 4 ஆம் வகுப்பு மாணவரான 10 வயது ஷ்ரவன் சிங்கிற்கு இந்திய ராணுவத்தின் கோல்டன் ஆரோ பிரிவு முழு கல்வி ஆதரவையும் உறுதியளித்துள்ளது.
சர்வதேச கணித ஒலிம்பியாட் 2025 இல் மூன்று தங்கம் உள்ளிட்ட ஆறு பதக்கங்கள் வென்றது இந்தியா
ஆஸ்திரேலியாவின் சன்ஷைன் கோஸ்டில் நடைபெற்ற 66வது சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) 2025 இல் உலகளவில் 7வது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.
அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் சரிவு; காரணம் என்ன?
அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர் வருகையில் ஏற்பட்டுள்ள கூர்மையான சரிவு கல்வி ஆலோசகர்களிடையே கவலையைத் தூண்டியுள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்கள் அதிகரிப்பு; உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்
உயர்கல்வி அணுகலை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 2025-26 கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% அதிகரிக்கப்படும் என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
QS உலக தரவரிசை 2026: முதல்முறையாக 54 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து சாதனை
QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 இல் இந்தியா தனது மிக உயர்ந்த பிரதிநிதித்துவத்தை அடைந்துள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது; முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள் இடம்பிடிப்பு
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு 2025 முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹார்வர்டு பல்கலைக்கழத்திற்கான 100 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு
பல்கலைக்கழகங்களுடனான தனது தொடர்ச்சியான சர்ச்சையின் ஒரு பெரிய விரிவாக்கத்தில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடனான மீதமுள்ள அனைத்து கூட்டாட்சி ஒப்பந்தங்களையும் ரத்து செய்யும் திட்டங்களை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் விசா ரத்து; வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
முறையான அறிவிப்பு இல்லாமல் வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் கல்வித் திட்டங்களை நிறுத்துவது குறித்து இந்திய மற்றும் பிற சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா ஒரு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட தமிழக அரசு மறுத்ததால், தமிழகத்திற்கான கல்வி தொடர்பான நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் கடந்த மே 7 அன்று தொடங்கிய பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, வெள்ளிக்கிழமை (மே 16) மாலை 6 மணி நிலவரப்படி 1,69,634 விண்ணப்பதாரர்களை ஈர்த்துள்ளதாக தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி அறிவித்தார்.
JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய விரோதப் போக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் காரணமாக துருக்கியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தேசிய அளவிலான குரல்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
தமிழக மாணவர்களே அலெர்ட்; பொறியியல் படிப்பிற்கு மே 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2025) மூலம் 2025-26 கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மே 7 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 இடங்களில் இடம்பிடித்த ஒரே இந்திய பல்கலைக்கழகம்; அண்ணா பல்கலைக்கழகம் எத்தனையாவது இடம்?
டைம்ஸ் உயர் கல்வி (THE) ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2025 வெளியிடப்பட்டது. கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச கண்ணோட்டம் உள்ளிட்ட 18 செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி 35 நாடுகளில் 853 நிறுவனங்களை மதிப்பீடு செய்துள்ளது.
பெருமைமிகு கோவை: 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக தேர்வு
கோவை மாவட்டம், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீனவ சமூக மாணவர்களின் முழு கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்; புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் மீன்வளத் துறை விழாவின் போது, முதலமைச்சர் என்.ரங்கசாமி ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பில், மீனவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விச் செலவுகளை அரசே முழுமையாக ஏற்கும் என்று அறிவித்தார்.
வெளிநாட்டு கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பதற்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பதை நெறிப்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒரு புதிய ஒழுங்குமுறையை உருவாக்கியுள்ளது.
2025-26 கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் வெளியீடு; புதிய சீர்திருத்தங்கள் அமல்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
கல்வித் துறையை கலைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்
ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) அமெரிக்க மத்திய அரசின் கல்வித் துறையை கலைக்கத் தொடங்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
கல்வித்துறை இனி மாநிலங்கள் வசம்; கூட்டாட்சி கல்வி நிறுவனத்தை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திடுகிறார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) கையெழுத்திட உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மார்ச் 11 வரை இளங்கலை நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி
தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு 2025க்கான விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
மும்மொழி ஏன் வேண்டும்? இந்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தி உள்ளிட்ட பன்மொழிக் கல்வியை ஆதரித்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காதவரை தமிழகத்திற்கு நிதியில்லை: மத்திய கல்வி அமைச்சர் கைவிரிப்பு
புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொள்ளும் வரை தமிழ்நாடு மத்திய கல்வி நிதியைப் பெறாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்காக சொந்தமாக ஏஐ'யை உருவாக்குகிறது கேரள அரசு
கேரள அரசு தனது பள்ளிகளுக்காக அரசுக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏ++ அங்கீகாரம்; NAAC குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கைது
கல்வி நிறுவனத்திற்கு ஏ++ அங்கீகாரம் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை சிபிஐ சனிக்கிழமை (பிப்ரவரி 1) கைது செய்தது.
கல்விக்காக ஏஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைக்கப்படும்; பட்ஜெட் 2025இல் அறிவிப்பு
கல்வித் துறைக்காக செயற்கை நுண்ணறிவுக்கான (ஏஐ ) சிறப்பு மையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
பட்ஜெட் 2025: கூடுதலாக 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் 2025ஐ சனிக்கிழமை (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
திடீரென மூடப்படும் FIITJEE பயிற்சி மையங்கள்; பெற்றோர்கள் அதிர்ச்சி; பின்னணி என்ன?
இந்திய அளவில் செயல்படும் பிரபல நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனமான ஃபிட்ஜீ (FIITJEE) கல்வி நிறுவனத்தின் டெல்லி என்சிஆர் மற்றும் வட இந்தியாவில் உள்ள பல கிளைகள் நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் மூடப்பட்டன.
இளங்கலை நீட் 2025 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான 2025 நீட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் தகுதிப் பட்டியல்கள், எம்பிபிஎஸ் சேர்க்கைகளுடன், பிடிஎஸ் (பல் அறுவை சிகிச்சை இளங்கலை) மற்றும் பிவிஎஸ்சி & ஏஎச் (கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை) படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அடிப்படையாகத் தொடரும் என்பதை தேசிய தேர்வு நிறுவனம் (என்டிஏ) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,100 க்கும் மேற்பட்ட கல்வித்துறை ஸ்டார்ட்அப்கள் மூடல்
ட்ரஸ்ச்னின் தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,148 கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப்கள் மூடப்பட்டுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செலவுகளை மிச்சப்படுத்த கல்லூரிக்கு விமானத்தில் சென்று வரும் மாணவர்; எந்த நாட்டில் தெரியுமா?
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (யுபிசி) கல்வி பயிலும் இறுதியாண்டு பொருளாதார மாணவர் டிம் சென், வான்கூவரின் உயரும் வாடகை விலைகளுக்கு வழக்கத்திற்கு மாறான தீர்வைக் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இனி 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது; புதிய நடைமுறையை வெளியிட்டது மத்திய அரசு
8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான ஆல் பாஸ் எனும் தோல்வியில்லாக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. திருத்தப்பட்ட கொள்கையின்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி தேர்வுகள் நடத்தப்படும்.