LOADING...
மாணவர்களுக்கு ஜாக்பாட்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இன்டர்ன்ஷிப்; 20,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் அரிய வாய்ப்பு
NHAI சம்மர் இன்டர்ன்ஷிப் 2026

மாணவர்களுக்கு ஜாக்பாட்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இன்டர்ன்ஷிப்; 20,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் அரிய வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 26, 2026
08:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), கல்லூரி மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டு மாத கால கோடைகால இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது. நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் நேரடி அனுபவம் பெற விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்த இன்டர்ன்ஷிப் வரும் 2026 மே 4 முதல் ஜூலை 5 வரை இரண்டு மாதங்களுக்கு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏப்ரல் 15, 2026 க்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான internshipsatnhai.digitalindiacorporation.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிகள்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

முழுநேர இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். குறிப்பாக NIRF தரவரிசையில் உள்ள கல்வி நிறுவனங்கள், முன்னணி சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த முறை தொழில்நுட்பம் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது: தொழில்நுட்பப் பிரிவுகள்: சிவில் இன்ஜினியரிங், ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், இசிஇ, எலக்ட்ரிக்கல், டேட்டா சையன்ஸ் மற்றும் ஏஐ. இதர பிரிவுகள்: சட்டம், வணிகவியல், மேலாண்மை, மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் லைப்ரரி சையன்ஸ்.

விண்ணப்பிக்கும் முறை

ஸ்டைபண்ட் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் 20,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இன்டர்ன்ஷிப் வெற்றிகரமாக முடிந்த பிறகு, NHAI அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இது மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்குப் பெரும் உதவியாக இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: NHAI இன்டர்ன்ஷிப் போர்ட்டலில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது கல்வி விபரங்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமான திட்ட இருப்பிடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் இந்த விண்ணப்பங்களைச் சரிபார்த்து அங்கீகரிக்க வேண்டும். கல்வி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். இறுதித் தேர்வு மற்றும் திட்ட ஒதுக்கீடு NHAI அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.

Advertisement