LOADING...
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு! 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து; வளைகுடா நாடுகளில் மட்டும்
மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு! 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து; வளைகுடா நாடுகளில் மட்டும்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
10:35 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக இந்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெறாது.

முக்கிய அறிவிப்புகள்

சிபிஎஸ்இயின் முக்கிய அறிவிப்புகள்

மார்ச் 16, 2026 முதல் ஏப்ரல் 10, 2026 வரை நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு முன்பு மார்ச் 1 முதல் மார்ச் 9 வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த அனைத்துத் தேர்வுகளும் இப்போது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும் மற்றும் தேர்வு முடிவுகள் எந்த அடிப்படையில் அறிவிக்கப்படும் என்பது குறித்த விபரங்கள் பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த இக்கட்டான முடிவை சிபிஎஸ்இ எடுத்துள்ளது. முன்னதாக வளைகுடா நாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement