Loading...
உடனே ஆன் செய்யாதீங்க! மழையில் நனைந்த போனைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 அவசர வழிகள்
மழையில் நனைந்த போனைப் பாதுகாக்க 5 எளிய வழிகள்

உடனே ஆன் செய்யாதீங்க! மழையில் நனைந்த போனைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 அவசர வழிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
11:29 am

செய்தி முன்னோட்டம்

மழைக்காலத்தில் எதிர்பாராதவிதமாக சிலர் தங்களது ஸ்மார்ட்போனை மழையிலோ அல்லது தண்ணீர் பள்ளங்களிலோ தவறவிட்டுவிடுவது வழக்கம். அத்தகைய தருணங்களில் பதற்றமடைந்து செய்யக்கூடாத சில தவறான காரியங்களால் போன் முற்றிலும் பழுதடைந்து அதிக செலவை ஏற்படுத்தக்கூடும். உங்கள் போன் தண்ணீரில் நனைந்துவிட்டால் உடனடியாகப் பின்பற்ற வேண்டிய 5 எளிய மற்றும் பாதுகாப்பான வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

#1

உடனடியாக போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்

போன் நனைந்தவுடன் பெரும்பாலானோர் செய்யும் முதல் தவறு, அது இயங்குகிறதா என ஆன் செய்து பார்ப்பதாகும்.

தண்ணீரில் நனைந்த போனை ஆன் செய்து வைத்தால், மதர்போர்டில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு போன் நிரந்தரமாக பழுதடைய வாய்ப்புள்ளது.

எனவே, போனை உடனடியாக ஸ்விட்ச் ஆஃப் செய்து, பொத்தான்களைத் தொடாமல் வைப்பது மிகவும் அவசியமாகும்.

#2

சார்ஜரில் இணைக்க வேண்டாம்

ஈரமாக இருக்கும் ஸ்மார்ட்போனை பரிசோதிக்க சார்ஜரில் இணைப்பது மிகவும் ஆபத்தானது.

ஈரத்தில் சார்ஜ் செய்யும்போது சார்ஜிங் போர்ட், பேட்டரி மற்றும் பிரதான போர்டு ஆகியவை பழுதடைவதுடன் தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

திரையில் 'Moisture Detected' என்ற எச்சரிக்கை வந்தால், போன் முழுமையாக உலரும் வரை சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ADVERTISEMENT

#3

சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை வெளியேெடுங்கள்

போனை ஆஃப் செய்தவுடன், சிம் ட்ரேயை வெளியே எடுத்துச் சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை தனியாக எடுத்து வைப்பது நல்லது.

இது கார்டுகள் பாழாவதைத் தடுப்பதுடன், போனின் உட்புறத்திற்கு சீரான காற்றோட்டம் சென்று ஈரப்பதம் எளிதாக வெளியேற உதவும்.

ADVERTISEMENT

#4

மென்மையான துணியால் துடைக்கவும்

ஒரு சுத்தமான மைக்ரோஃபைபர் அல்லது மென்மையான பருத்தித் துணியை பயன்படுத்தி போனின் வெளிப்புறம், பொத்தான்கள், கேமரா லென்ஸ் மற்றும் சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை மெதுவாகத் துடைக்க வேண்டும்.

போனை வேகமாகக் குலுக்குவதோ அல்லது தட்டுவதோ கூடாது. அவ்வாறு செய்வதால் நீர் மேலும் உட்புறப் பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

#5

ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தாதீர்கள்; இயற்கையாக உலர விடுங்கள்

ஈரத்தை உலர்த்துவதற்காக சூடான காற்று வீசும் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது போனின் உட்புற பாகங்கள் மற்றும் டிஸ்பிளேவை சேதப்படுத்தும்.

அதற்குப் பதிலாக, நல்ல காற்றோட்டம் உள்ள உலர்ந்த இடத்தில் போனை வைத்து 24 முதல் 48 மணி நேரம் வரை இயற்கையாக உலர விட வேண்டும்.

குறிப்பு

அரிசிப் பையில் போனை வைப்பது பலன் தருமா?

ஈரமான போனை அரிசிப் பையில் வைப்பது ஒரு பழைய தீர்வாகப் பேசப்பட்டாலும், அது முழுமையான பலனைத் தராது.

மேலும் அரிசியில் உள்ள தூசிகள் போனின் போர்ட்டுகளுக்குள் சென்று அடைப்பை ஏற்படுத்தக்கூடும்.

அதற்குப் பதிலாக சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம்.

போன் மிகவும் அதிகமாக நனைந்திருந்தால், அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்க்கும் மையத்தை அணுகுவதே சிறந்த தீர்வாகும்.

ADVERTISEMENT