Loading...
முற்றிலும் இலவச சிகிச்சையா? ஹெபடைடிஸ் பி நோய் குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஹெபடைடிஸ் பி நோய் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

முற்றிலும் இலவச சிகிச்சையா? ஹெபடைடிஸ் பி நோய் குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
11:18 am

செய்தி முன்னோட்டம்

சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்தியாவில் ஹெபடைடிஸ் பி நோய்க்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் உண்மையே. இருப்பினும் இதில் சில நிபந்தனைகள் உள்ளன. உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தேசிய வைரல் ஹெபடைடிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NVHCP) கீழ் அரசு மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஹெபடைடிஸ் பி

ஹெபடைடிஸ் பி நோய் என்றால் என்ன?

ஹெபடைடிஸ் பி என்பது கல்லீரலைப் பாதிக்கும் ஒரு தீவிர வைரஸ் தொற்றாகும்.

இந்நோயின் முக்கிய ஆபத்தே, ஆரம்பக் கட்டங்களில் எந்தவிதமான வெளிப்படையான அறிகுறிகளும் தென்படாது என்பதாகும்.

பாதிக்கப்பட்ட நபர் ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றினாலும், உடலினுள் இருக்கும் வைரஸ் கல்லீரலை சிறுக சிறுகப் பாதித்து கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் தழும்பு மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவில் சுமார் 4 கோடி முதல் 5 கோடி மக்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இலவச சிகிச்சை

இலவச சிகிச்சையின் கீழ் எவை எல்லாம் அடங்கும்?

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த NVHCP திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகும் நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை, வழக்கமான கண்காணிப்பு மற்றும் ஆன்டிவைரல் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இருப்பினும், ஹெபடைடிஸ் பி பாசிட்டிவ் என்று முடிவுகள் வரும் அனைவருக்கும் உடனடியாக மருந்துகள் தேவையில்லை.

மருத்துவர்கள் அவர்களின் கல்லீரல் இயக்கம் மற்றும் வைரஸின் அளவைக் கணக்கிட்டே சிகிச்சையைத் தீர்மானிப்பார்கள்.

ADVERTISEMENT

சிகிச்சை

ஹெபடைடிஸ் பி நோயைக் குணப்படுத்த முடியுமா?

ஹெபடைடிஸ் சி நோயைப் போல ஹெபடைடிஸ் பி நோயை முற்றிலுமாக உடலிலிருந்து அழிக்க முடியாது.

ஆனால் நவீன ஆன்டிவைரல் மருந்துகள் மூலம் வைரஸின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுத்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மேலும், தடுப்பூசி மூலம் இந்நோய் வராமல் தடுத்துக் கொள்ள முடியும் என்பதால், தடுப்பூசி போடா தவறியவர்கள் மற்றும் கல்லீரல் நோயாளிகளின் குடும்பத்தினர் உடனடியாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது.

ADVERTISEMENT

முக்கிய அம்சங்கள்

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

இந்த அறிவிப்பு முற்றிலும் புதிய திட்டம் அல்ல என்றாலும், அரசு மருத்துவமனைகளில் இயங்கும் இந்த இலவச சேவையை மாவட்ட அளவிலிருந்து கிராமப்புற சுகாதார மையங்களுக்கும் அரசு விரிவாக்கம் செய்துள்ளது.

கல்லீரல் தீவிரமாகப் பாதிக்கும் வரை அறிகுறிகள் வெளியாகாது என்பதால், அரசு மையங்களில் எளிதாகக் கிடைக்கும் ரத்தப் பரிசோதனையை முன்னரே செய்துகொள்வது எதிர்கால ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்கும்.

ADVERTISEMENT