மத்திய பிரதேசம்: செய்தி
90 டிகிரி ரயில்வே மேம்பால விவகாரத்தில் ஏழு பொறியாளர்களை இடைநீக்கம் செய்தது மத்திய பிரதேச அரசு
போபாலின் ஐஷ்பாக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில் மேம்பாலம் சர்ச்சைக்குரிய வகையில் 90 டிகிரி கோணத்தில் வடிவமைக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், மத்திய பிரதேச அரசு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பொதுப்பணித் துறையின் இரண்டு தலைமை பொறியாளர்கள் உட்பட ஏழு பொறியாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வரின் வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீரை நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்!
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் Convoy-இல் இருந்த 19 வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு, என்ஜின் பழுதாகி, தள்ளி செல்லப்பட்ட ஒரு வினோதமான சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.
கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம்
கர்னல் சோபியா குரேஷியை "பயங்கரவாதிகளின் சகோதரி" என்று கூறியதற்காக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பட்டோடி குடும்பத்திற்கு அடுத்த சிக்கல்: ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை இழக்கக்கூடும்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பட்டோடி குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.15,000 கோடி மதிப்புள்ள மூதாதையர் சொத்துக்கள் (பெரும்பான்மையான போபாலில் உள்ளவை), மீதான தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கிய பிறகு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரலாம்.
வருமானவரித் துறையினருக்கு ஷாக்; முன்னாள் பாஜக எம்எல்ஏ வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கிய முதலைகள்
மத்திய பிரதேசத்தில் முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் வரி ஏய்ப்பு மட்டுமின்றி, அவரது வீட்டில் உள்ள குளத்தில் மூன்று முதலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை; மத்திய பிரதேசத்தில் சோகம்
மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியை ரேஷ்மா பாண்டே, சைபர் கிரைம் மோசடி நபர்களின் அச்சுறுத்தல் காரணமாக விஷம் குடித்து உயிரிழந்தார்.
பெங்களூர் அருகே குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்? வைரலாகும் வீடியோவின் பின்னணி
பெங்களூர் அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஸ்ரீ யுக்புருஷ் தாம் ஆசிரமத்தில் 72 மணி நேரத்திற்குள் அடையாளம் தெரியாத நோயினால் மனநலம் குன்றிய ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
தீயில் சேதமடைந்த EVMகள்; மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதடைந்ததால், மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு முன் பாஜகவில் இணைந்த இந்தூர் வேட்பாளர்: காங்கிரஸுக்கு அடிக்கு மேல் அடி
மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தனது இரண்டாவது மக்களவை வேட்பாளரை இழந்தது.
நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்
கணவன்-மனைவியாக நீண்ட காலம் ஆணுடன் லிவ் இன் ரிலேஷன் வாழும் பெண், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பிரிந்து செல்லும் போது பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் பெரும் தீ விபத்து; 14 பேர் படுகாயம்
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் இன்று (மார்ச் 25) காலை ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானவாபியை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் போஜ்சாலா மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறை முடிவு
வாரணாசியின் ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வை அடுத்து, மற்றொரு சர்ச்சைக்குரிய இரு மதங்களுக்கு சொந்தமான இடத்தை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய உள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் சேர வாய்ப்பு
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் ஆகியோர் பாஜகவில் சேரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் ராஜ்ய சபா MP ஆகிறார் எல்.முருகன்
மத்தியபிரதேசத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என பாஜக கட்சி அறிவித்துள்ளது.
'நண்பன்' பட பாணியில், தாத்தாவை பைக்கில் மருத்துவமனைக்கு கூட்டிவந்த வாலிபர்
சனிக்கிழமையன்று, மத்தியப் பிரதேச மாநிலம் சட்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மாவட்ட மருத்துவமனைக்கு ஒருவர் தனது தாத்தாவை நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் பலி; 100 பேர் காயம்
மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் கிராமத்தில் இருக்கும் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
3 குட்டிகளைப் ஈன்றது நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிறுத்தை
நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட நமீபிய சிறுத்தையான ஜ்வாலா, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
மத்திய பிரதேசம்: சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 26 சிறுமிகள் மாயம்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 26 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இன்று பிற்பகல் 28 உறுப்பினர்கள் மத்தியப் பிரதேச அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில், வளர்ப்பு நாய் தன்னை நோக்கி குரைத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நாயின் உரிமையாளரை கொன்ற 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விரிவுரையாற்றும்போது மேடையில் சரிந்து விழுந்த ஐஐடி கான்பூர் பேராசிரியர் பலி
கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு 53 வயது பேராசிரியர் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச காங்கிரஸின் மாநில பொது செயலாளர் ஆனார் ஜிது பட்வாரி
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக ஜிது பட்வாரியை நியமித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?
ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு
மத்திய பிரதேசத்தின் முதல்வரை இறுதியாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவை அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் திருநம்பி(Transman) ஒருவர் தனது நீண்ட நாள் காதலியை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.
ம.பி., ராஜ்., சத்தீஸ்கர் தேர்தல் வெற்றி; புதிய முகங்களை முதல்வராக்க திட்டமிடும் பாஜக
சமீபத்திய தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி (BJP) தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர் பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது.
மத்திய பிரதேச பொது செயலாளர் கமல்நாத்தை பதவி நீக்க இருக்கிறதா காங்கிரஸ்?
சமீபத்தில் நடந்த மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் பொது செயலாளர் கமல்நாத் பதவி விலக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ்
கடந்த மாதம் நடைபெற்ற மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்சிகள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இறுதியாகியுள்ளது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களின் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்கள் யார்?
சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு, தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்
'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கு, டிசம்பர் 6ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை
சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், 3 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்
தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, 5 மாநில சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்.
உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை
"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே வகுப்பில் படிக்கும் மாணவனை காம்பஸால் 108 முறை குத்திய 4ஆம் வகுப்பு சிறுவர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 4ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் சேர்ந்து அதே வகுப்பில் படிக்கும் மாணவனை 108 முறை காம்பஸால் குத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு
இந்தியாவில் 5 மாநில தேர்தல் நடந்து வரும் நிலையில், இன்று(நவ.,17) மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது.