Loading...

விவசாயிகள்: செய்தி

08 Oct 2026
• தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ₹4,000: ரூ.603.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு அரசாணை

தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, 2025-2026ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகையாக முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.603.34 கோடி நிதியினை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.

06 Oct 2026
• ஜிஎஸ்டி

விவசாயத் துறைக்கு வரி விலக்கு: விதைகளின் சேமிப்பு மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி குறைகிறது

விவசாயத் துறையின் நிதி சுமையைக் குறைக்கும் வகையில், அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விதை சேமிப்பு கிடங்கு வசதிகள் மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

விவசாயிகளே கவனத்திற்கு! கூட்டுறவு பயிர்க்கடன் வசூல் நிறுத்தம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவை பயிர்க்கடன்களை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

24 Sep 2026
• தமிழகம்

தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணை பிறப்பித்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது என கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! செய்யாறு மேல்மா கிராமத்தில் சிப்காட் நில எடுப்பு அரசாணை ரத்து

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு அறிவிக்கையைத் தவெக அரசு அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.

15 Sep 2026
• கடன்

இந்தியாவில் தனித்துவமான கடன்கள்: பால்வளத்தில் இருந்து இயற்கை விவசாயம் வரை

இந்தியாவில் உள்ள விவசாயிகள், புதிய மற்றும் தனித்துவமான ப்ராஜெக்ட்களுக்கு நிதி திரட்ட, வழக்கத்திற்கு மாறான கடன்களை நாடி வருகின்றனர்.

05 Sep 2026
• லடாக்

சிந்து நதியில் இந்தியா கட்டிய முதல் பாறை அணை! பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து லடாக்கில் விவசாயத்திற்கு திருப்பிவிட்டது

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக முடக்கி வைத்துள்ள நிலையில், லடாக்கின் லே பகுதியில் உள்ள உப்ஷி என்ற இடத்தில் சிந்து நதியின் குறுக்கே இந்தியா தனது முதல் பாறை தடுப்பணையைக் கட்டியுள்ளது.

அன்றைய தினமே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்; விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையில் புதிய நடைமுறைகள் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

31 Aug 2026
• தமிழகம்

பால் உற்பத்தியாளர்களுக்கு முதல்வர் விஜய் சூப்பர் அறிவிப்பு! கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகளுக்கு உரம் விநியோகம் அதிகரிக்கப்படும்: வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரிடம் ரஷ்யா அதிபர் உறுதி

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: திமுகவிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்

தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் புதிய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகைகளை அறிவித்தார்.

வறட்சியால் கருகிய பயிர்கள்! இங்கிலாந்து விவசாயிகளுக்கு 65 மில்லியன் பவுண்ட் உதவித் தொகை அறிவிப்பு

இங்கிலாந்து முழுவதும் நிலவி வரும் தொடர் வெப்ப அலை மற்றும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் 65 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான) அவசரகால நிதி உதவியை அரசு அறிவித்துள்ளது.

10 Aug 2026
• விஜய்

வரலாற்றிலேயே முதல்முறை! நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

06 Aug 2026
• பட்ஜெட்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: விவசாயிகளுக்கான டாப் 10 முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

01 Aug 2026
• அமைச்சரவை

விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி! பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! ₹3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

08 Jul 2026
• பெட்ரோல்

"E20 பெட்ரோலால் இன்ஜின் பாதிப்பா? ஆதாரம் இருந்தா சொல்லுங்க": மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்படும் E20 பெட்ரோல் திட்டம், வாகனங்களின் இன்ஜின் செயல்திறனை பாதிப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார்.

30 Jun 2026
• நிதி

இந்தியாவில் தங்கக் கடன்: வகைகள் மற்றும் அம்சங்கள் ஒரு பார்வை

தங்கக் கடன் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு நிதித் தேர்வாக உள்ளது. இதன் மூலம் தனிநபர்கள் தங்கள் தங்கச் சொத்துக்களைப் பயன்படுத்தி உடனடியாகப் பணம் பெற முடியும்.

25 Jun 2026
• கடன்

இந்தியாவில் விவசாயக் கடன்கள்: பயிர்க்கடன் மற்றும் அரசு மானியங்களைப் பெறுவது எப்படி? முழு விவரம்

இந்தியாவில் விவசாயக் கடன்கள் என்பவை, விவசாயிகளுக்கு அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் அவசியமானவை.

22 Jun 2026
• பருவமழை

இந்தியாவில் ஜூன் மாதத்தில் 146 ஆண்டுகளில் இல்லாத வறட்சி! 46% மழைக் குறைவால் கவலை

இந்தியாவின் பெரும்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை, சுமார் இரண்டு வாரக் காலத் தேக்கநிலைக்குப் பிறகு தற்பொழுது மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை ரூ.75,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

12 Jun 2026
• விஜய்

டெல்டா விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பின் முழு விவரம்!

நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வழக்கமான ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்க முடியாத சூழல் உருவானது.

30 May 2026
• பருவமழை

இந்தியாவில் ஜூன் முதல் எல் நினோ தாக்கம் தொடங்கும்! கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு பருவமழை குறையும்!

இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எல் நினோ காலநிலையின் தாக்கம் இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 May 2026
• தமிழகம்

தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி: குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து குறு விவசாயிகளுக்கும் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று (மே 25) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐடிஐ முடித்துவிட்டு இயற்கை விவசாயம்: 23 நாட்களில் 1.5 லட்சம் ஈட்டிய இளைஞர் சாதனை

உத்தரபிரதேசம் மாவ் பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் மவுரியா என்ற ஐடிஐ பட்டதாரி இளைஞர், வழக்கமான வேலைக்குச் செல்லாமல் தனது கிராமத்திற்கே திரும்பி விவசாயத்தில் களமிறங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் கடும் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), இந்த வாரம் இந்தியா முழுவதும் நிலவும் வெப்ப அலை குறித்து சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

TVK தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்: 25 லட்சம் இன்சூரன்ஸ் முதல் இலவச தங்கம் வரை

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டார்.

பில் கேட்ஸ் பரிந்துரைக்கும் புத்தகங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிறந்த நன்கொடையாளரான (Philanthropist) பில் கேட்ஸ், ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாக ஆதரவு அளித்து வருபவர்.

06 Apr 2026
• இந்தியா

இந்தியாவின் முதல் 1 டிரில்லியன் ரூபாய் எஃப்எம்சிஜி நிறுவனம்: அமுல் படைத்த வரலாற்று சாதனை

இந்தியாவின் 'வீட்டுப் பிராண்ட்' என்று அழைக்கப்படும் அமுல், 2025-26 நிதியாண்டில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

31 Mar 2026
• வீடு

குறைந்த செலவில் நகரத் தோட்டக்கலைக்குத் தேவையான கருவிகள்

குறைந்த இடத்தில் உங்கள் சொந்த உணவை வளர்ப்பதற்கு நகரத் தோட்டக்கலை ஒரு சிறந்த வழி.

ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி: பெட்ரோலில் 20% எத்தனால்! கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சமாளிக்க பிளான் பி; பிரதமர் மோடி உரை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய எத்தனால் கலப்புத் திட்டமே சிறந்த தீர்வு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட்அப்கள் மற்றும் விவசாயிகளுக்காக சட்டங்களில் திருத்தம்: நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்கிறார்

இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், சிறு நிறுவனங்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் வழிவகை செய்யும் 'நிறுவன சட்டங்கள் (திருத்த) மசோதா 2026'-ஐ (Corporate Laws Amendment Bill, 2026) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்கிறார்.

12 Mar 2026
• வாழ்க்கை

தக்காளி செடியில் பூச்சிகள் தொல்லையா? காய்கள் சுவையாக மாற இந்த 5 செடிகளை உடன் வளர்த்துப் பாருங்கள்

துணை செடி வளர்ப்பு என்பது தக்காளி செடிகள் நன்கு வளர உதவும் ஒரு வழி. உடன் வளர்க்கும் சில செடிகள் தக்காளிக்கு மிகவும் உதவும்.

04 Mar 2026
• விஜய்

"விவசாயக் கடன் ரத்து; இலவச உயர்கல்வி!": டெல்டாவில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற அக்கட்சியின் இரண்டாம் கட்ட பரப்புரை கூட்டத்தில் விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

மண்ணும் வேண்டாம்.. நிலமும் வேண்டாம்! காற்றில் உருளைக்கிழங்கு வளர்த்து அசத்தும் விஞ்ஞானிகள்! ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தின் ரகசியம் என்ன?

மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜமாதா விஜயராஜே சிந்தியா வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மண்ணே இல்லாமல் காற்றில் உருளைக்கிழங்கு வளர்க்கும் விந்தையைச் செய்துகாட்டியுள்ளனர்.

விவசாயிகளின் பாக்கெட்டில் ஒரு ஆலோசகர்! பாரத் விஸ்தார் AI கருவி அறிமுகம்! பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைத்த டிஜிட்டல் பரிசு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த பட்ஜெட்டில், தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்த பாரத் விஸ்தார் (Bharat Vistaar) என்ற புதிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தளத்தை அறிவித்துள்ளார்.

18 Jan 2026
• இந்தியா

டிரம்பிற்கு இந்தியா கொடுத்த சைலண்ட் பதிலடி; அமெரிக்கப் பருப்புக்கு 30% வரி; வர்த்தகப் போரில் மிரளும் அமெரிக்க விவசாயிகள்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் மீண்டும் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.

வரப்போகுது அடுத்த வரி; இந்திய அரிசி மீது வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மானிய விலையில் இந்தியா அரிசியை அமெரிக்க சந்தையில் 'கொட்டுவதாக' குற்றம் சாட்டி, இந்திய அரிசி இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்

மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி: பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு

டெல்டா மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விதிக்கப்பட்டக் காலக்கெடுவை, வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

15 Nov 2025
• இந்தியா

விவசாயிகளுக்கு குட் நியூஸ்; நவம்பர் 19 அன்று PM-KISAN 21வது தவணையை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 19, 2025 அன்று வெளியிடவுள்ளார்.

14 Nov 2025
• தமிழ்நாடு

விவசாயிகளே அலெர்ட்; பயிர்க் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவம்பர் 15) கடைசி நாள் என மாநில வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

அமெரிக்காவிடம் இருந்து எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்; விவசாயிகள் நலனே முக்கியம் என பிரதமர் மோடி உறுதி

உலகளாவிய வர்த்தகப் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் பேசுகையில், சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நலன்களுக்குத் தமது அரசு ஒருபோதும் தீங்கு வர விடாது என்று உறுதியளித்தார்.

17 Aug 2025
• இந்தியா

களைக்கொல்லி குறித்து புகார் தெரிவித்த விவசாயி; நேரடியான விளைநிலத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்

மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள சிராகேடா கிராமத்தில் உள்ள சோயாபீன் வயல்களில், தனியார் நிறுவனம் வழங்கிய களைக்கொல்லியைப் பயன்படுத்தியதால் பயிர்கள் அழிந்ததாக புகார்கள் வந்ததை அடுத்து, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) திடீர் ஆய்வு நடத்தினார்.

30 லட்சம் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு ₹3,200 கோடி இழப்பீடு வழங்க உள்ளது

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் ஒரு பகுதியாக ₹3,200 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

07 Aug 2025
• இந்தியா

'இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது..': டிரம்பின் 50% வரிகளுக்கு மோடி பதிலடி

இந்தியா தனது விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.

வாரணாசியில் பிஎம் கிசான் சம்மன் நிதியின் 20வது தவணையை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வாரணாசிக்குச் சென்று ₹2,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

24 Jul 2025
• வர்த்தகம்

இந்தியா-இங்கிலாந்து FTA: இந்திய விவசாயிகளுக்கு ஒரு வெற்றி வாய்ப்பாக மாறும்!

இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) இடையே வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement - FTA) வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது.

20 Jul 2025
• தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற இவர்களுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை; புதிய உத்தரவு

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் இருந்து பயிர் கடன்களைப் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

விவசாய நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்; மத்திய அமைச்சர் தகவல்

நிலத்தடி நீரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை நடவடிக்கையாக, விவசாயத் துறையில் நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

10 Apr 2025
• அமைச்சரவை

ரூ.1,600 கோடியில் விவசாயிகளுக்கான புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதம மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (PMKSY) திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான கட்டளைப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை (M-CADWM) துணைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 19வது தவணை பிப்ரவரி 24 அன்று வெளியாகிறது

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24 அன்று பீகார் மாநிலம் பாகல்பூருக்குச் செல்ல உள்ளார், அங்கு அவர் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் 19 வது தவணையை வெளியிடுகிறார்.

01 Feb 2025
• பட்ஜெட் 2025

பின்தங்கிய விவசாய பகுதிகளின் வளர்ச்சிக்கு தன் தியான் க்ரிஷி யோஜனா திட்டம் தொடக்கம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது பிஎம் தன் தியான் க்ரிஷி யோஜனா தொடங்குவதாக அறிவித்தார்.

29 Jan 2025
• இந்தியா

பிஎம் கிசான் யோஜனா 19வது தவணை பிப்ரவரி 24 அன்று வெளியிடப்படும் எனத் தகவல்

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 19வது தவணையை பிப்ரவரி 24, 2025 அன்று பெற உள்ளனர், இது மில்லியன் கணக்கான மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிதி உதவியை வழங்குகிறது.

16 Jan 2025
• இந்தியா

விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா இந்தியா முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு முக்கியமான நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.

30 Dec 2024
• பஞ்சாப்

பஞ்சாபில் விவசாயிகள் பந்த் அறிவிப்பு; போக்குவரத்து பாதிப்பு, 200 ரயில் சேவைகள் நிறுத்தம்

பஞ்சாபில் விவசாயிகள் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்தி வருவதால் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

23 Dec 2024
• இந்தியா

தேசிய விவசாயிகள் தினம் 2024: ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம், கிசான் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

02 Dec 2024
• டெல்லி

டெல்லியில் மற்றொரு போராட்டத்தை தொடங்க விவசாயிகளின் அமைப்பு தயாராகிறது: அவர்களின் கோரிக்கைகள் என்ன?

டெல்லியில் மற்றொரு போராட்டத்தை தொடங்க விவசாயிகள் அமைப்பு தயாராகி வருகிறது.

3.1 லட்சம் விவசாயிகளுக்கு பலன்; தெலுங்கானாவில் ₹2,747 கோடி மதிப்பிலான விவசாய கடன்கள் தள்ளுபடி

தெலுங்கானா மாநிலத்தின் நான்காம் கட்ட விவசாயக் கடன் தள்ளுபடியை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை அறிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆறு முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.2000; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடையும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 5) விநியோகிக்க உள்ளார்.

ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கிருஷோன்னதி யோஜனா (KY) ஆகிய திட்டங்களுக்கு வியாழனன்று (அக்டோபர் 3) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு

சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28), மத்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியது மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு $490 ஆக நிர்ணயித்துள்ளது.

26 Sep 2024
• இந்தியா

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 18வது தவணைக்காக பயனாளிகள் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5ஆம் தேதி தொகையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 Sep 2024
• ஐஐடி

நிலத்தடி நீர்மட்ட இழப்பை சரிக்கட்ட மாற்று பயிரிடுதல் தான் சரியான வழி; ஐஐடி ஆய்வில் தகவல்

ஏறத்தாழ 40% நெல் சாகுபடியை மாற்றுப் பயிர்களுக்கு மாற்றுவதன் மூலம், வட இந்தியாவில் 2000ஆம் ஆண்டு முதல் இழந்த 60-100 கன கிலோமீட்டர் நிலத்தடி நீரை மீட்டெடுக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

15 Sep 2024
• இந்தியா

உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு

எண்ணெய் வித்துக்களின் விலை குறைவதிலிருந்து உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க, சனிக்கிழமை (செப்டம்பர் 14) முதல், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் ஆகியவற்றின் மீது இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்துள்ளது.

முந்தைய
•
அடுத்தது