இன்று நடைபெறுகிறது விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லி-நொய்டா எல்லையில் பெரிய நெரிசல் ஏற்பட வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் யமுனா விரைவுச்சாலை வழியாக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர்.
அதனால், டெல்லி-நொய்டா எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நூற்றுக்கணக்கான பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கும்.
யமுனா எக்ஸ்பிரஸ்வே, லுஹர்லி டோல் பிளாசா மற்றும் மஹாமாயா மேம்பாலம் வழியாக டிராக்டர் அணிவகுப்பு நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதனால், அந்த இடங்களில் போலீசார் போக்குவரத்தை மாற்றியமைத்துள்ளனர்.
டெல்லி-நொய்டா எல்லை தடுப்புகள் மூலம் சீல் வைக்கப்படும் மற்றும் டெல்லி அல்லது நொய்டாவுக்குள் நுழையும் வாகனங்களை போலீசார் சோதனை செய்வார்கள்.
மக்கள் யமுனை விரைவுச் சாலையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், சிரமத்தைத் தவிர்க்க மாற்று வழிகள் அல்லது மெட்ரோவைப் பயன்படுத்து மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி
விவசாயியை அடித்து தாக்கிய போலீஸார்
இரண்டு நாட்களுக்கு முன், பிப்ரவரி 29 வரை தங்களது பேரணியை இடைநிறுத்த போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
மேலும், அவர்கள் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள கானௌரி மற்றும் ஷம்பு புள்ளிகளில் தங்கியிருக்க போவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இன்று மீண்டும் பேரணியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள கானௌரியில் பிரித்பால் சிங் என்ற விவசாயி சமூக சேவை செய்து கொண்டிருந்தபோது, அவர் டிராக்டர் டிராலியில் இருந்து போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"அவர் தனது டிராக்டர் தள்ளுவண்டியில் இருந்து இழுத்து செல்லப்பட்டு, தாக்கப்பட்டார். பின்னர் ரோஹ்டக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்." என்று விவசாயி தலைவர் பல்தேவ் சிங் சிர்சா கூறியுள்ளார்